பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

mino

76

mono



minority interest— சிறுபான்மையர் நலம்: ஒரு நிறுமத்தில் குறைந்த அளவுள்ள பங்குதாரர்களின் நன்மை

mixed economy – கலப்புப்பொருளியல்: இதில் சில சரக்குகள், பணிகள் அரசாலும், சில தனியாராலும் உற்பத்தி செய்யப்படுதல். பெரும்பான்மைப் பொருளியல்கள் கலப்புப் பொருளியல்களே. இந்தியா பின்பற்றுவது கலப்புப் பொருளியலே

monetarism – பணவியம்: பணக்கொள்கை. பெரும் பொருளியல் கொள்கை பணத்தை மையமாகக் கருதுவது. பண அளவுக் கொள்கையின் அடிப்படையில் அமைந்தது. முதன் முதலில் ஸ்காட்டிஷ் மெய்யறிவாளர் தாவீது கிஃபூம் (1711 - 76) என்பவரால் தெரிவிக்கப்பட்டது. பொருளியலில் பண அளவுக்கு விலையளவைத் தொடர்புப்படுத்துவது. கெயின்சின் கொள்கைக்கு நேர்மாறானது

monetary assets and liabilities - பண இருப்புகளும் பொறுப்புகளும் இருப்புகள் வர வேண்டிய பணங்கள். பொறுப்புகள் கொடுக்க வேண்டிய பணங்கள். கணக்கில் குறிப்பிடப்பட்ட பணத்தொகையாகக் காட்டப்படுபவை எ-டு. பணம்,பண இருப்பு, கடன்கள், கடன் ஈந்தோர்,கடனாளி

monetary policy – பணக்கொள்கை பணம் வழங்குகையை உயர்த்தி அல்லது தாழ்த்திப் பெரும் பொருளியல் நிலைமைகளை ஊக்குவிக்குமளவுக்கு அரசு மேற்கொள்ளும் வழிவகைளில் ஒன்று. இது தொடர்பாக மூன்று விருப்பப் பேரங்கள் உண்டு 1) அதிகப் பணத்தை அச்சிடல் - இது தற்பொழுது இல்லை 2) பணத்துறையில் நேரடியாகப் பணம் கட்டுப்படுத்தப்படுதல் 3) திறந்த அங்காடி நடவடிக்கைகள்

பாதுகாப்பான ஆவணம் பணக் கொள்கை என்பது கெயின்சின் கருத்து. இதற்கு நேர்மாறான கொள்கையுடையவர்கள் பணவியலார்

money - பணம்: பரிமாற்றுக் கருவி. கணக்கு அலகாகவும் மதிப்புச் சேமிப்பாகவும் வேலை செய்வது. பொருள்கள் வாங்கவும், விற்கவும் பயன்படுவது

money lender— கடன் கொடுப்பவர்:வட்டி ஈட்டப்பணத்தைப் பொறுப்பின் பேரில் கொடுப்பவர்

monopoly - ஏகபோக உரிமை: முற்றுரிமை. ஒரு சந்தையில் விற்பவர் ஒருவர் மட்டுமே இருத்தல்