பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

nati

78

net



யாக்கப்பட்டது சிறந்த எடுத்துக்காட்டு

national plan - தேசியத் திட்டம் : தன் பொருளாதாரத் வளர்ச்சிக்குக் குறிப்பட்ட காலத்தில் வகுக்கும் பொருளாதாரத் திட்டம் எ-டு. ஐந்தாண்டுத் திட்டம்

near money – அண்மைப் பணம் பணம் உடன் மாற்றக்கூடிய சொத்து எ-டு மாற்றுண்டியல்

negotlabllity - செலவாணி திறன்: ஒப்பந்தத்திறன். ஓர் ஆவணத்தை ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு மாற்றுந் தன்மையும் அதனால் பெறும் ஆதாயமும்

negotiable instrument – செலாவணி ஆவணம்: தடையில்லாமல் ஒப்பந்தம் செய்து நன்மை பெறக்கூடிய பத்திரம் எ-டு. மாற்றுண்டியல்

net assets - நிகரச் சொத்துகள்; ஒரு நிறுமத்தின் நடப்புப் பொறுப்புகள் நீங்கலாகவுள்ள சொத்துகள். இதனால் உண்டாகும் தொகுபயன் புள்ளி நிறுமத்தின் முதலுக்குச் சமமாக இருக்கும்

net asset value — சொத்து மதிப்பு: எல்லா முதலினப் பொறுப்புகளும் மற்றப் பொறுப்புகளும் நீங்கலாகவுள்ள ஒரு நிறுமத்தின் மொத்த இருப்புகள் முதலினப் பொறுப்புகளில் அடங்குபவை. கடன் பத்திரங்கள், கடன் இருப்புகள், முன்னுரிமைப் பங்குகள். ஒரு வங்கிக்குரிய நிகரச் சொத்து மதிப்பு என்பது அம்மதிப்பை மொத்தப் பங்குகளால் வகுத்து வரும் தொகையாகும்

net book value — நிகர ஏட்டு மதிப்பு: ஒரு நிறுமத்தின் ஏடுகளில் தோன்றும் சொத்தின் மதிப்பு. அதாவது, இறுதி ஐந்தொகையின் பொழுது, இதிலிருந்து தேய்மானம், வாங்கியதிலிருந்து கழிக்கப்பட வேண்டும்

net cash price - நிகர பணவிலை: பணவிலை - முன் தொகை = நிகரப்பணவிலை

net current assets — நிகர நடப்புச் சொத்துகள்: நடப்புப் பொறுப்புகள் நீங்கிய நடப்புச் சொத்துகள்

net domestic product — நிகரமனையக விளை பொருள் : முதலின நுகர்வு நீங்கலான (தேய்மானம்) ஒரு நாட்டின் மொத்த மனையக விளைபொருள்

net hire purchase price- நிகரத் தவணைமுறை விலை: தவணைமுறை விலையிலிருந்து கீழ்க்காண்பனவற்றைக் கழித்தால் கிடைப்பது நிகரத் தவணை முறை விலை