பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

net

79

nomi


1) பொருளை எடுத்துச் செல்வதற்குச் செலுத்தப்பட்ட பணம்

ll) செலுத்தப்பட்ட பதிவுக் கட்ட ணம் அல்லது இதரக் கட்டணங்கள் III) காப்பீடு செய்தல்

net income — நிகர வருமானம்: 1) சம்பாதிப்பதில் உள்ளடங்கிய செலவுகளை நீக்கிய பின் உள்ள ஒருவர் அல்லது ஒரு நிறுமத்தின் வருமானம் 2) வரி நீங்கிய மொத்த வருமானம்

net investment — நிகர முதலீடு: ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு பொருளாதாரத்திலுள்ள முதலினச் சரக்குகளின் இருப்போடு சேர்க்கப்படுபவை. இவை முதலின நுகர்வு (தேய்மானம்) நீங்கியவை

net national product — நிகர தேசிய விளைபொருள்: ஒரு சமயத்தில் முதலின நுகர்வு (தேய்மானம்) நீங்கிய மொத்தத் தேசிய விளைபொருள். இது தேசிய வருமானத்துக்குச் சமமானது. அதாவது, சரக்குகளுக்கும் பணிகளுக்கும் செலவு செய்வதற்குரிய பணத்தின் அளவு

net price - நிகர விலை: கழிவுகள் எல்லாம் நீங்கிய பின் வாங்குபவர் சரக்குகளுக்கு அளிக்கும் விலை

netprofit - நிகர இலாபம்: செலவுகள் எல்லாம் நீங்கியபின் இருக்கும் ஆதாயம். இச்செலவுகளில் வரிகளும் அடங்கும்

net profit ratio — நிகர இலாப வீதம்: ஒரு நிறுமத்தின் மொத்த விற்பனைக்கும் நிகர இலாபத்திற்குமுள்ள வீதம். நிறுமத்தின் இலாபம் ஈட்டலைப் பகுக்க, இது உதவுவது. விற்பனை எந்த அளவுக்கு இலாபம் உள்ளதாக அமைந்தது என்பதையும் இது காட்டுவது

net receipts – நிகர வரவுகள்; செலவுகளைக் கழித்தபின், குறிப்பிட்ட காலத்தில் ஒரு தொழிலில் பெறப்படும் பணத்தின் மொத்த அளவு

ஒ. gross receipt

net weight - நிகர எடை: பொருள்களின் எடை மட்டும்

பா. gross Weight

net worth- நிகர மதிப்பு: பொறுப்புகள் எல்லாம் நீங்கிய ஒரு நிறுவனத்தின் மதிப்பு

net yield— நிகர விலை பயன் : வரிநிங்கிய பின் ஓர் ஈட்டின் பயன் gross yield

new issue– புது வெளியீடு : முதல் தடவையாகப் பங்குச் சந்தையில் பங்கு வெளியிடப்படுதல்

nominal accounts – பெயரளவுக்கு கணக்குள்: வேறுபெயர் கற்பனைக் கணக்குகள். ஊதியம், வாடகை, விளம்பரம், மின்