பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

nomi

offer

80

 கட்டணம், கழிவு, வட்டி முதலியவை தொடர்பான கணக்குகள்

nominal ledger – பெயரளவுப் பேரேடு: பெயரளவுக் கணக்குகள் உள்ளது

nominal price – பெயரளவு விலை: வாணிப நடவடிக்கைக்காகக் குறிப்பிடப்படும் விலை

nomination – பெயர் குறிப்பீடு:ஆதாயம் அடையப் பெயரிடப்படுபவர்

nominee –பெயராளர்:மற்றொருவரால் பெயர் குறிப்பிடப்படுபவர்

nominator - பெயராளி: பெயர் குறிப்பவர்

non-cumulative preference share - குவியா முன்னுரிமைப் பங்கு.

normal economic profit – இயல்பான பொருளியல் ஆதாயம்: ஒரு குறிப்பிட்ட தொழிலில் முனைவோரை வைத்திருக்கக்கூடிய கொள்கை அளவு ஆதாயம்

normal price – இயல்பான விலை: வழங்கல், தேவை ஆகிய இரண்டிற்குமிடையே சமநிலை இருக்கும் பொழுது, ஒரு சரக்கு அல்லது பணியின் கொள்கை விலை

normative economics — நெறிசார் பொருளியல்: என்ன செய்யப்பட வேண்டும் என்பதைப் பற்றிய தீர்ப்புகளைப்பகுத்துப் பார்க்கும் பொருளியல்; கொள்கை மட்டும் கூறுவதன்று எ-டு. கெயின்சின் பொருளியல்

notary public – சான்றலுவலர்: வழக்கமாக வழக்கறிஞர் ஆவணங்களைச் சான்றொப்பமிட உரிமையுள்ளவர்

noting - மறுப்புக்குறிப்பு: மாற்றுண்டியல் மறுக்கப்படும் பொழுது, மேற்கொள்ளப்படும் முறை

O

object clause –நோக்கப் பிரிவு;அமைப்பு விதிசார்ந்தது

objectivity – புறத்தன்மை: கணக்கியல் பயிற்சியில் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கக் கூடிய திறன்

obsolescence – வழக்கொழிதல்: 1) தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகப் பயனில்லாது போகும் எந்திரத்திற்குக் கணக்கிடுந் தேய்மானம் 2) ஓர் எந்திரத்தை வயது அடிப்படையில் தேய்மானத்திற்கு உட்படுத்தல் பா. depreciation

offer - விலைக்குறிப்பீடு: விற்பவர் தன் பொருளுக்கூறும் விலை

offer by prospectus— வாய்ப்பறிக்கைக் குறிப்பீடு: இவ்வறிக்