பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

opi

order

82

opinion poll – கருத்து வாக்கெடுப்பு: அங்காடி பிடிக்கும் ஆராய்ச்சி நுணுக்கங்களைக் கொண்டது. சிறப்பாக, இது அரசியல் கருத்தோடு தொடர்புடையது. இது இருவகை

1) பொதுக் கருத்து வாக்கெடுப்பு: இது செய்தித்தாள், தொலைக்காட்சி முதலிய மக்கள் ஊடகங்களால் நடத்தப்படுவது. இதில் வாசகர்களும் பார்ப்பவர்களும் செய்திகள் பெறுவர் 2) தனிக்கருத்து வாக்கெடுப்பு: இதை அரசியல் கட்சிகள் கொள்கை பரப்பலுக்காகவும் கட்சி வளர்ச்சிக்காவும் பயன்படுத்தும்

option - விருப்ப உரிமை: ஒருவர் ஒரு பண்டம், செலாவணி முதலியவற்றைக் குறிப்பிட்ட அளவு வாங்கவும் விற்கவும் உள்ள உரிமை

option, call – வாங்கு விருப்ப உரிமை: வாங்குவதற்குரிய விருப்ப உரிமை. விலை உயரும் என்னும் நோக்கில் வாங்கப்படுவது

option dealer- விருப்ப உரிமை ஈடுநர்: பங்குச் சந்தையிலோ பண்டச்சந்தையிலோ வணிக விருப்ப உரிமைகளையோ விருப்ப உரிமைகளையோ வாங்குபவர் அல்லது விற்பவர். ஈடுநர் - ஈடுபடுபவர். வாங்கு விருப்ப உரிமையர் எனச் சுருக்கலாம்

option money— விருப்ப உரிமைப் பணம்: ஒரு விருப்ப உரிமைக்குப் பெறப்படும் வாங்கு விருப்ப உரிமைச் செலவு வாங்கு பணமாகும். விற்கும் விருப்ப உரிமைச் செலவு விற்கும் பணமாகும்

option, put – விற்கும் விருப்ப உரிமை: விற்பதற்குரிய உரிமை

option to-double-இரட்டிக்கும் விருப்ப உரிமை: ஒரு விற்பனையாளர் தம் ஈடுகளை இரட்டித்த அளவில் விற்கும் உரிமை

option to purchase – வாங்கு விருப்ப உரிமை: குறைந்த விலையில் சில சூழல்களால் சில நிறுமங்களில் பங்குகளை வாங்கப் பங்குதாரர்களுக்குக் கொடுக்கப்படும் உரிமை

option, traded — வணிக விருப்ப உரிமைகள்: பங்குச் சந்தையில் வாங்கப்படுபவை, விற்கப்படுபவை

order cheque – ஆணைக் காசோலை: பா. cheque.

order of business— நிகழ்ச்சி நிரல் வரிசை: ஒரு தொழில் நடவடிக்கைக் கூட்ட நிகழ்ச்சிகளின் வரிசை எ-டு. வரா