பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

over

84

pack


முதலைக் கொண்டிருக்கும் நிலை

overdraft - மேற்கடன், மேற்பற்று: வங்கியில் தவணையில் திருப்பி செலுத்தும் வகையில் மேம்பாட்டுக்காகக் குறிப்பிட்ட எல்லைக்குள் வாங்கும் கடன் எ-டு. ரூ. 50,000, 1,00,000

overhead costs - மேற் செலவுகள்: மறைமுகச் செலவு நடப்புச்செலவு. சரக்குகளை உற்பத்தி செய்ய ஆகும் மறைமுகச் செலவுகள். அதாவது. சரக்குகளை உற்பத்தி செய்யப் பொருள்கள், உழைப்பு ஆகியவற்றிற்கு மேலாகச் செய்யப்படும் செலவுகள். இவை இருவகை. 1) நிலைச்செலவுகள்: மாறாதவை எ-டு. தொழிற்சாலை வாடகை, எந்திரத் தேய்மானம் 2) மாறும் செலவுகள்: உற்பத்திக்குத் தகுந்தவாறு மாறுபவை. எ-டு. ஆற்றல். எரிபொருள்

overinvestment- மேல் முதவீடு: ஆதாயத்தை எதிர்பார்த்து, அதிக முதலீடு செய்தல்

oversold - மேல் விற்கப்பட்டது: உற்பத்திக்குமேல் வாடிக்கையாளரால் வாங்கப்பட்டது

oversoldmarket- மேல் விற்கப்பட்ட சந்தை: மீ விற்பனை செய்த சந்தை

Over subscription- மேல்பண அளிப்பு: புதிய பங்குகள் வெளியிடுவதற்குரிய விண்ணப்பங்கள் எதிர்பார்த்த அளவுக்கு மேல் வருதல். இந்நிலையில் சில விதிகளுக்கு உட்பட்டு. அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு நேர்மாறானது கீழ்ப்பண அளிப்பு, இது நடைபெறுவது அரிது

overtrading - மேல் வணிகம்: தன் முதல் வழங்கலுக்கு மேலும் ஒரு நிறுமம் வணிகம் செய்தல்

package deal - கூட்டு ஒப்பந்தம்: எல்லாப் பகுதிகளையும் ஒப்புக் கொள்ளக்கூடிய உடன்பாடு

packages - கட்டுமங்கள்: சிப்பங்கள், கொள்கலன்கள், நிறுமங்கள் தங்கள் சரக்குகளை அனுப்பும் பெட்டி, குவளை முதலியவை

packaging - கட்டுமம் : 1) விளை பொருள்களுக்குரிய உறைகள். 2) கட்டுமம் செய்தல்: கொள்கலன்களை வடிவமைத்தல். 3) கட்டும் வினை : கட்டுமம் செய்பவரின் பல நடவடிக்கைகளின் தொகுதி

packing - கட்டுதல்