பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

par

86

pay


2) இதன் நோக்கம் தொழில் நடத்துவதே 3) ஆதாயம் கூட்டாளிகளுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்படும் 4) ஒவ்வொரு கூட்டாளியும் ஏனைய கூட்டாளிகளின் முகவராவர். 5) ஒவ்வொரு கூட்டாளியும் ஏனைய கூட்டாளிகளின் முதல்வருமாவர்

par value, face value, nominal valus - சமமதிப்பு : ஓர் ஈடு அல்லது பங்கின் பெயரளவுவிலை. ஓர் ஈட்டின் சந்தை மதிப்பு பெயரளவு விலைக்கு விஞ்சுமானால், அது மேல் சமமதிப்பு என்றும், குறையுமானால் கீழ்ச் சமமதிப்பு என்றும் பெயர் பெறும்

partlal undertaking - பகுதி ஒப்புறுதி: ஒவ்வோர் ஒப்புறுதியாளர் மூலம் வந்த விண்ணப்பங்கள் குறிப்பிடப்பட்டு எஞ்சியுள்ள பங்குகள் ஒப்புறுதியாளர்களின் ஒப்புறுதிப் பொறுப்பின்படி ஒப்புக்கொள்ளப்படுதல்

participating preference shares - பங்குகொள் முன்னுரிமைப்பங்குகள் : பங்கு ஈவுக் கூடுதல் உரிமைகள் உள்ளவை, அதாவது, இருதடைவைகள் இலாப ஈவு கொண்டவை

patent- உரிமை முத்திரை: புனவுரிமை. ஒரு புனைவை உருவாக்கி அதைப் பயன்படுத்த அளிக்கப்படும் தனி உரிமை

patentee - உரிமை முத்திரையர்: உரிமை முத்திரை வழங்கப்படுபவர்

patent office- உரிமை முத்திரை அலுவலகம் உரிமை முத்திரை வழங்கப்படும் இடம்

pawn- அடகு: அடகுப்பொருள்

pawn broker- அடகாளர்: அடகின் பேரில் கடன் கொடுப்பவர் எ-டு. வட்டிக் கடைக்காரர்

payable to bearer- கொணர்பவருக்குக் கொடுக்க: மாற்றுண்டியலில் எழுதப்படுவது. இதில் குறிப்பிட்ட எந்தப் பெயரும் இராது. இதை வைத்திருப்பவர் தன் பெயரை எழுதிப்பணம் பெறலாம்

payable to order- ஆணைப்படி கொடுக்க : மாற்றுண்டியலில் எழுதப்படுவது. இதில் பெறுபவர் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். இதில் வரையறைகளோ மேலொப்பங்களோ இராது. மேலொப்பம் செய்யப்படுவர் பணம் பெறலாம்

payes - பெறுநர்: தொகை பெறும் ஆள் அல்லது அமைப்பு

paying banker- கொடுக்கும் வங்கியர்: காசோலை அல்லது