பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

pay

87

perso


மாற்றுண்டியலுக்குப் பணம் வழங்கும் வங்கி நிறுவனத்தார்.

payment in advance- முன்கூட்டிய கொடுபாடு: சரக்குகள் வருவதற்கு முன்னரே பணங்கொடுத்தல்

payment in due course- உரிய காலக்கொடுபாடு: மாற்றுண்டியல் முதிர்ச்சியடையும் பொழுது பணம் கொடுக்கப்படுதல்

payment in kind - பொருள் கொடுபாடு: பணத்திற்குப்பதில் சரக்குகளைக் கொடுத்தல்

payment on account- கணக்கு வழிக்கொடுபாடு: சரக்குகள் விலைப் பட்டியல் இடுவதற்கு முன், அவற்றிற்குப் பணம் கொடுத்தல்

payment terms- கொடுப்பாட்டு நிபந்தனைகள் : வாங்குபவர் சரக்குகளை விற்பவருக்குப் பணம் கொடுக்கும் முறை

penalty- தண்டம்: ஓர் உடன்பாடு மீறப்படும் பொழுது, அதற்காகக் கொடுக்கப்படும் தொகை

pension - ஓய்வூதியம்: பணி ஓய்விற்குப் பின் திங்கள் தோறும் தம் பணி நிலைக்கு ஏற்றவாறு ஒருவர் பெறும் தொகை பா.provident fund

per contra - எதிர்ப்பதிவு: ஒரு கணக்கின் எதிர்ப்பக்கத்தில் குறிப்பிட்ட தொகை பதிவு செய்யப்படுதல். ஒரே பக்கத்தின் இரு எதிர்ப்பக்கங்களில் பற்று வரவுப் பதிவுகள் ஆகிய இரண்டும் இருக்கும் பொழுது பயன்படுவது

peril - இடர்: பொருளாதார இழப்பு உண்டாக்கும் நிகழ்ச்சி. இதற்குக் காப்புறுதி பயனளிப்பது.

period bill - தவணைக்கால உண்டியல் குறிப்பிட்ட நாளில் கொடுக்கப்படக் கூடிய மாற்றுண்டியல்

period of grace - கண்ணோட்ட காலம்: கெடுகாலம் கடந்தபின் வழங்கப்படுங்காலம். மாற்றுண்டியல், காப்புறுதி முதலியவற்றிற்கு அளிக்கப்படுவது

perpetual debenture - நிலையான கடன் பத்திரங்கள்: ஒரு பொழுதும் மீட்கப்பட முடியாதவை

perpetual Inventory- நிலையான பொருள்பட்டியல்: இருப்பிலுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் தொடர்ச்சியாக விவரம் எடுக்கும் பட்டியல். ஒரு பக்கம் வரவும் மற்றொரு பக்கம் செலவும் காட்டும்

perpetual succession - நிலை வழியுரிமை: ஒரு நிறுமம் சட்டப்படி கலைக்கப்படும் வரை நிலைத்திருத்தல்

personal accounts - ஆள்சார் கணக்கு. பேரேட்டில் தனியாள்