பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

109

கழுவி விடுகிறார்கள். முகம் துடைக்கச் செய்கிறார்கள். புத்துணர்வு கூடுகிறது.

இதுதான் என் பிறந்த வீடோ? பிரசவத்துக்கு இந்தத் தாய்வீட்டுக்கு மன்னர் அனுப்பி இருக்கிறாரோ?

முகத்தைக் கழுவிக் கொண்டபின் வாயில் நீருற்றிக் கொப்புளித்ததை ஏந்த ஒரு மண்தாலம் வருகிறது.

ஒங்கரித்து வரும் புரட்டல் அடங்கி, சமனமாகிறது.

அங்கிருந்து இதமாகப் புல் பரப்பிய இன்னொரு குடிலுக்கு அழைத்துச் செல்கிறார்கள். கனிகளைச் சுமந்து ஒரு வேடுவப் பெண் வருகிறாள். பிரப்பந்தட்டில், அரிந்த மாங்கனிகள், இருக்கின்றன. அவள் குனிந்து வைக்கையில், வேடுவருக்கே உரிய ஒரு வாடை வீசுகிறது.

மன்னர் முன்பு தங்களுக்கு ஒருவேடுவக் கிழவி, கடித்துக் கடித்து ருசி பார்த்த கனிகளைத் தந்து உபசரித்ததை விவரித்த வரலாறு நினைவில் முட்டுகிறது. இவரும் கிழவிதான். முன்பற்கள் இல்லை. தாடையோரம் ஒரு பல் தொத்திக் கொண்டு இருக்கிறது. முடி உதிர்ந்து முன் மண்டை தெரிகிறது. இழிந்த செவிகள். மார்பகம்பையாகத் தொங்குகிறது. அரையில் அதிகப்படியாக ஒரு நார் ஆடை மானம் மறைக்கிறது.

அவள் இவள் பட்டுப் போன்ற கூந்தலைத் தேய்ந்த கரத்தால் மென்மையாகத் தடவி, “தேவி, உங்களுக்கு வணக்கம்” என்று கரைகிறாள். இது வணக்கமா? வாழ்த்தா? பூமகளின் நெஞ்சம் உருகுகிறது.

“மகாராணி, பயணத்தில் களைத்திருக்கிறீர்கள். இந்தக் கனிகளை உண்டு இங்கே படுத்து இளைப்பாறுங்கள். எங்கள் குல தெய்வமே வந்தாற்போல் வந்திருக்கிறீர்கள்...” என்று பொருள்பட கொச்சை மொழியில் தழுதழுக்கிறாள் அந்த அம்மை.

அந்தக் கனிகள், புளிப்பு, இனிப்பும் கலந்ததாக, நாரும் தோலுமாக இருந்தாலும், அவர்கள் அன்பு அவளுக்கு அமுதமாக அந்த உணவை மாற்றி விடுகிறது. ஒரு குடுவையில், காரசாரமான