பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

111

கொண்டும், தெளிவு துலங்கப் பார்க்கிறாள். கிழக்கு வெளுத்து உதயவானின் செம்மையும் கரைந்து வருகிறது.

“இவ்வளவு நேரமா தூங்கி விட்டேன்?”

“மன்னித்துக் கொள்ளுங்கள், மகாராணி? ராஜா, காலையில் வந்து, கங்கை கடந்து செல்ல வேண்டும் என்று அழைத்தார். தாங்கள் அயர்ந்து உறங்கினீர்கள்...”

திரை விலகி, நினைவுகள் குவிகின்றன.

அவள் கண்கள் அங்கு கூடியிருந்த முகங்களில் யாரையோ தேடுகிறது. அந்த அம்மை, அவள் அன்னை போல் இதம் செய்த அம்மை எங்கே?

“அவர் எங்கே? எனக்குக் கனிகள் அரிந்து கொடுத்து, இதமாக கால்களைப் பிடித்து விட்ட அன்னை, எங்கே?”

“இவள்தான்... ரீமு...”

“தாயே, நான்தான் கொடுத்தேன்...”

முடியில் பறவை இறகுகளைச் செருகிக் கொண்டு மோவாயில் முக்கட்டி போல் பச்சைக்குத்துடன் ஓர் இளம் பெண் முத்து நகை சிந்துகிறாள்.

“என் அம்மா... நான் தங்களுக்குக் குடுவையில் குடிக்கப் பானம் கொண்டு வந்தேன்...”

அவர்கள் எல்லோரையும் அணைந்து கொள்ள வேண்டும் போல் இருக்கிறது.

“நீங்கள் அன்னை, தமக்கை, தங்கை, எல்லா எல்லா உறவுகளும் எனக்கு இங்கே இருக்கின்றன. நான் இப்போது எதற்கு, எங்கு செல்ல வேண்டும்!”

ஆனால் கேட்க நா எழுப்பவில்லை. “மன்னர் ஆணையை, இளையவர் நிறைவேற்றுகிறார். யாரேனும் சடாமுடி முனிவர்க் கங்களைப் பணிந்து ஆசி பெற்று வர வேண்டும்!”

அவள் அவர்களிடம் பிரியாவிடை பெறுகிறாள்.