பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

117

கீழே செங்காயாகக் கிடக்கும் கனி ஒன்றை எடுத்துக் கடிக்கிறாள். விருவிரென்று இனிப்பும் துவர்ப்புமாக ஒரு சுவை ஆரோக்கியமாகப் பரவுகிறது. நந்தமுனியின் நினைவு வருகிறது.

அவர் இப்போது எங்கே இருப்பார்?. அவர் இங்கே இப்போது வந்தால் எத்துணை நன்றாக இருக்கும்?

அப்போது ஒசைப்படாமல் அவள் தோளில் வந்திறங்குகிறது ஒரு கிளி.

அவள் கையிலிருக்கும் செங்கனியைக் கொத்துகிறது. மனதோடு ஒரு பேரின்ப வாரிதி அலை மோதுகிறது.

“தத்தம்மா! தத்தம்மா? என் உயிர்த்தோழி தத்தம்மா தானா? எனக்கு இது கனவல்லவே?.”

அது அந்தக் கனியை உண்ணவில்லை. கொத்திக் கொத்தித் திருவிப் போடுகிறது.

“என் தத்தம்மா இல்லை. ஆனாலும், நீ என் தோழியாக வந்திருக்கிறாய். என் தனிமையைப் போக்குவாய். உனக்கு நான் கதைகள் சொல்வேன்; பாடல்கள் இசைப்பேன். உன்னைக் கூட்டில் அடைக்கும் சாதியில் பட்டவளல்ல நான். நான் பூமகள். பூமிஜா, உன் பிரியமான தோழி. சொல்லு!” என்று அதைத் தடவிக் கொடுக்கிறாள்.

“ஏய், உன்னை நான் தத்தம்மா என்றே கூப்பிடுகிறேன். ஏன் குரலேகாட்டாமலிருக்கிறாய்! ஊமையா நீ? பறவைகளில் ஊமை உண்டா? நீ என் தத்தம்மா போலவே இருக்கிறாய். அது ஒருநாள் காயம் பட்டு வீழ்ந்தது. அதை எடுத்து இதம் செய்தேன். தோழியாக்கிக் கொண்டேன். மன்னர் பெயரைச் சொல்லப் தே கிக் சொல்ல பழக்கினேன். பேச்சுப் பழக்கினேன். பிறகு ஒருநாள் அது மன்னர் பெயரைச் சொல்ல மறுத்துவிட்டது. மன்னர் பெயரை நான் ஏன் சொல்ல வேண்டும்?; நீதான் எனக்குத் தோழி, எல்லாம் தருகிற-