பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

123


தடாகக்கரையோரம். உச்சியில் முடிந்த முடியும் வற்றி உலர்ந்த மேனியும், ஒற்றை நாண் யாழுமாக.“டொய்-டொய்.நீ.ம். ரீம்..” சரக்கென்று எழுந்திருக்கிறாள். “நேசமுள்ளாரை நெஞ்சிலே நினைந்தாலே, போதும்”, “எந்தையே! என்னை வாழ்த்துங்கள்.” புற்றரையில் ஒரு முரட்டுக்காலணியுடன் நடந்து வரும் அவர்முன் பணிகிறாள். நீர் முத்துக்கள் அந்தக் காலணியின் இடைப்பட்ட மெலிந்த பாதங்களுக்கு அணிகளாய் வீழ்கின்றன.

அவர் அவளை மெல்லத் தோள்களைப் பற்றி எழுப்புகிறார்.

“நீ மங்களச் செல்வி ஆற்றுக்கரையில் உன் கிளி எனக்குச் சேதி கூறிற்று. உன்மீது எந்த மாசும் ஒட்டாது. உனக்கு எந்தத் துயரும் வராது, தாயே, உன் அருள் நெஞ்சில் எந்தச் சோகத்தின் நிழலும் கரையும்.வா, குழந்தாய்!”

“சுவாமி, மன்னருடன் கானகம் வந்த நாட்களில், உங்களை எங்கேனும் சந்திப்பேனோ என்று நாள்தோறும் நினைப்பேன். பல நாட்கள், காதம் காதமாக நடந்தோம். அப்போதெல்லாம் நீங்கள் காணக் கிடைக்க வில்லை. இப்போது, என் உள்ளார்ந்த தாபமே தங்களை இங்கே கொண்டு வந்து விட்டது. பெரியம்மா நலமாக இருக்கிறாரா? என்னை அவரிடம் அழைத்துச் செல்லுங்கள் சுவாமி!”

“நிச்சயமாக அங்கேதான் செல்கிறோம். உண்மையில், நீ சொன்னதை மனசில் எண்ணிக் கொண்டு, மன்னரையும் கண்டு உங்களை அழைத்துச் செல்லவே நான் வந்து கொண்டிருந்தேன். ஒடக்காரர் ஒருவர், காலையில் தான் இளவரசரும் மகாராணியும் ஆறு கடந்து சென்றார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். புரியவில்லை. உடனே உன் கிளி “உண்மை, உண்மை.” என்று சொல்லிப் பறந்து சென்றது.”

தடாக நீரில் புதுமை பெற்று, கனிகளைப் பறித்துப் பசியாறிக் கொண்டு அவர்கள் நடக்கிறார்கள். பூமைக்குக் களைப்பே தெரியவில்லை. வழியெல்லாம், சிறுமிப் பருவ நினைவுகளை மகிழ்ச்சி பொங்கப் புதுப்பித்தவளாய் அவருடன் நடக்கிறாள். பசியாறக்கனிகளுக்குப் பஞ்சமில்லை. மேலாடை உள்ளாடைகள்