பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

வனதேவியின் மைந்தர்கள்

போவாங்க. நாங்களும் மிதுனபுரிச்சந்தைக்குப் போவோம். வேணுங்கற சாமானெல்லாம் கிடைக்கும். பானை, துடுப்பு, தட்டு, இந்த மூங்கில் வெட்டிக்கூடை பண்ணுவோம். பெரி.ய சந்தை. நந்தசாமிக்கு அதான் ஊராம். அங்கேகூட வயசான ராணியம்மா இருக்காங்களாம்.”

இவள் பேச்சில் சைகையே மிஞ்சி இருப்பதால் கொச்சை மொழியையும் புரிந்து கொள்கிறாள். இந்த மரங்கள், செடிகளை நட்டு வளர்த்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் காட்டும் அன்பு, அரண்மனைக்குள் அவள் கண்டிருந்த மகாராணி பணிப்பெண் அன்பு அல்ல. இவர்களுடன் கூட்டமாக உணவு கொள்வதே புதுமையாக இருக்கிறது.

பெரிய பானையில் பொங்கிய தானிய உணவு. அவித்த கிழங்கோ, மீனோ தெரியாத ஒரு மசியல். தேனில் பிசைந்த மாவு. எல்லோரும் கையில் தேக்கிலையோ வாழை இலையோ, ஏதாவதோர் இலையை வைத்துக் கொண்டு, சமமாக லூவோ, குல்பியோ போடுகிறார்கள். குடுவையில் நல்ல நீர்..

இது மீனா, இறைச்சியா என்றறியாமலே அவள் உண்ணுகிறாள். பகிர்ந்து உண்ணுதல். பிள்ளைகளும் அவளிடம் வந்து வாங்கிக் கொள்கிறார்கள்.

பெரியம்மா, வனதேவிக்கு புட்டு செய்து கொடுக்கச் சொன்னார். ராக்கன் வேதவதியில் இருந்து பெரிய மீன் பிடித்து வந்தான். அரண்மனையில் இதுபோல் இருக்குமா?

கவளம் நெஞ்சில் சிக்கிப் புரையேறிக் கொள்கிறது.

பெரியம்மா அவள் உச்சியை மெல்ல தட்டி குடுவை நீரைக் குடிக்கச் செய்கிறாள்.

அரண்மனையில் யாரோ நினைப்பார்கள்! சொல்லி சிரிக்கிறாள்.

“பெரியம்மா,... அரண்மனையில் இந்த மாதிரி உணவு கிடைக்குமா என்று கேட்டாளே? நிச்சயம் கிடைக்காது. இந்த