பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

141

அத்தினி அழகு எடுத்து இந்தப் பக்கம் ஒண்னு அந்தப் பக்கம் ஒண்னு இடுக்கிக்கிறேன். குதிக்கிறேன், கூத்தாடுறேன். வாய்க்கு வந்ததெல்லாம் பாடுறேன். புள்ளங்க கக்கு கக்குன்று சிரிக்குதுங்க. இடுப்பிலேயே குதிக்கிதுங்க. நான் சிரிக்கிறேன், குதிக்கிறேன்.

-அப்பத்தான், இந்த ஆளு வந்து கத்துது. “ஏ. கிடுவி! என்ன ஆச்சி குதிச்சிக்குதிச்சிச் சிரிக்கிற கனவா? உனக்குக் கிறுக்கிப் பிடிச்சிச்சா? உடம்பத்துக்கி தம்தம்முனு போடுற?. அப்பத்தா எனக்கு அது கனான்னு புரிஞ்சிச்சி.”

“கெனாவா? பாட்டிக்கு கருப்பஞ்சாறு உள்ளே போயிரிச்சி. அதான் தங்க தங்கமா கெனா வருது! மிதுனபுரிச் சந்தையிலே போயி, அஞ்சுகுடுவ வாங்கி வந்திருக்கு. நாம செய்யிற சாரம் இப்படி வராது!” என்று இளைஞன் ஒருவன் சிரிக்கிறான். இப்போதும் குடுவைகளில் இலுப்பை மதுவோ, தானிய மதுவோ வைத்திருக்கிறார்கள்.

ஆட்டம் பாட்டமும் நிகழ்கையில், பூமகள் தன்னை மறந்திருக்கிறாள். கிடுவி கனவில், அந்த இரண்டையும் நீயே பறித்து வைத்துக் கொள், ராசாவிட்டு ஆளுகள் வந்து கொண்டு போகப் போகிறார்கள்’ என்ற செய்தி மட்டும், பாயசத்தில் படியும் துரும்பாக உறுத்துகிறது. இந்த மனிதர்களின் அன்பும் அரவணைப்பும் அவளுக்கு எந்நாளும் இருக்கும். அவளையே உதறியவர்கள், அவள் பிள்ளையைச் சொந்தம் கொண்டாட முடியுமா?.

பெரிய இலைகளில், உணவை வைத்து முதலில் அவளுக்குக் கொடுக்கிறார்கள். குடுவை மதுவில் ஒர் அகப்பையில் ஊற்றி அவளைப் பருகச் சொல்கிறார்கள். அவள் மறுப்புக் காட்டியபோது, பெரியம்மை அருகில் வந்து, “சிறிது எடுத்துக்கொள் தாயே, உனக்கு நல்லது, உடம்பு தளர்ந்து கொடுக்கும்” என்று அருந்தச் செய்கிறாள்.

இங்கே விருந்து நடைபெறும் வேளையில் சம்பூகனும் குழலூதி வருகிறான். பூமகள் அருகே அந்த இசை கேட்கையில் மனம் ஒன்றிப் போகிறது. அந்த இசையில் உடலசைப்பும்