பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

145

தெரியும் பச்சைக்குத்து முகத்தைப் பார்க்கிறாள். “அவர்கள் மேல், நச்சம்பு விட வேண்டாம் என்று சொல்லுங்கள் தாயே! வேண்டாம்...”

“ஓ, அதுதானா? இப்ப ஏது? இவங்க யாருக்கும் அந்த நஞ்சு ஏதும் தெரியாது. இப்ப அந்தச் செடியும் இல்ல. சத்திய முனிவரும் சம்பூகனும் இப்ப மருந்துக்குத்தான் எல்லாச் செடியும் வச்சிருக்காங்க! இங்க, தாயே, பாம்பு கூட கடிக்காது. அதுங்ககிட்ட நஞ்சு இருக்கு. அது சும்மா, நாம அடிக்காம இருக்கணும்ங்கறதுக்காக வச்சிருக்கு. அதில்லன்னா, அத்தையும் அடிச்சிக் கொன்னு போடுவோம். அழிச்சிடுவம். சத்தியசாமி அதும் வாயிலேந்து விசம் எடுத்து, ஒருக்க தீராத நோயைத் தீர்த்து வச்சாங்க. இங்க எல்லாம் நல்லபடியா இருக்கத்தான் சாமி படைச்சிருக்குது. நீ கலங்காத தாயி...”

லூ... லூ... நீயும் என் அன்னையா?..

அவள் கழுத்தைச் சுற்றி இதமாகக் கைகளை வைத்துக் கொள்கிறாள்.

அஞ்சியபடி எதுவும் நடக்கவில்லை. ஆனால் இருள் கவியும் நேரத்தில் நந்தசுவாமி அவளைப் பார்க்க தம்பூரை இசைத்துக் கொண்டே வருகிறார். பூமகள் ஒளிச்சுடரின் முன், அன்னையைத் தொழுகிறாள்.

ஆதிநாயகன் அன்னையே போற்றி;
அகிலம் விளங்கும் அருளே போற்றி!
சோதிச் சுடரின் சக்தியே போற்றி;
சொல்லொணாத நற்சுவையே போற்றி!....
இன்பத்துடிப்பினில் துன்பம் வைத்தனை;
துன்பவலியிலும் இன்பம் வைத்தனை!
புரிந்தவை யனைத்தும் பூடகமாயின.
பூடகமெல்லாம் புரிந்து போயின!
போற்றி போற்றி பூதலத்தாயே!.

வ. மை-10