பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

வனதேவியின் மைந்தர்கள்


        ஆதிநாயகன் அம்மை உனையே
        சரணடைந்தேன்.

வெறும் ரீம் ரீம் ஒலி மட்டுமே கேட்கிறது

அவள் சட்டென்று நிமிருகிறாள்."சுவாமி வணங்குகிறேன்” என்று நெற்றி நிலம் தோய வணங்குகிறாள்.

பெரியன்னை மூலையில் இருந்து குரல் கொடுக்கிறாள்.

“யாரப்பா அரசர் படை? அவர்கள்தாமா?”

“ஆமாம் தாயே. கடைசி இளவலுக்குப் பட்டாபிஷேகம் செய்து மேற்கே அனுப்பியிருக்கிறார்கள்.”

“ஒ, எந்த சத்துருக்களை வெல்லப் போகிறான்? இன்னும் அசுரப்படைகள் இவர்கள் சங்காரம் செய்யக் காத்திருக்கிறார்களா?”

“லவணனோ, பவணனோ. ஒரு பெரிய கடப்பாறை போன்ற சூலாயுதம் வைத்திருக்கிறானாம். இவர்களுக்கு அச்சம் வந்துவிட்டது. அதனால் முன்கூட்டியே பட்டாபிசேகம் செய்து, எல்லா விமரிசைகளுடனும் புறப்பட்டுச் செல்கிறார்கள். அவன் உறங்கும்போதோ எப்போதோ அந்த ஆயுதத்தை இவர்கள் அபகரித்து அவனைக் கொன்றபின், அந்த ஊருக்கு நன்மை பிறக்கும். அந்த அரசகுலம் அங்கு தழைக்கும்.”

“அப்பாடா..” என்று பெரியன்னை பெருமூச்சுவிடுகிறாள் “அக்கரையோடு. அவர்கள் சென்று, வேதம் வல்லார் முனி ஆசிரமங்கள் எதிலேனும் தங்குவார்கள். இங்கே எதற்கு வரப்போகிறான்!”

பூமகளுக்கு ஒவ்வொரு சொல்லும் இடி கொள்வது போல் வேதனையைத் தோற்றுவிக்கிறது.

இவளை நாடுகடத்திய ம றுகணமே சாம்ராச்சிய ஆசையா அதற்குத்தான் இவள் தடையாக இருந்தாளா?