பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

வனதேவியின் மைந்தர்கள்


“அடி கண்ணம்மா! இப்படி ஒரு துட்டப்பிள்ளைகளைப் பெற்றிருக்கிறாய்! வந்து பார்!”

பெரியம்மை முன்பெல்லாம் பேசவே மாட்டாராம்! இப்போது கத்திக் கத்திக் குரல் மிகப் பெரிதாக ஒலிக்கிறது. இந்த முதிய வயசில், அவளுக்கு நடுக்கம் கூட இல்லை.

“என்ன ஆயிற்று?” என்று ஓடி வருகிறாள்.

ஒரு கரும்பறவை, கீழே தீனமாகக் குரல் கொடுத்துத் துடிக்கிறது. இவள் பிள்ளைகள் கையில் ஆளுக்கொரு குச்சியுடன் நிற்கின்றனர். இருவர் கைகளிலும், கள்ளிக்குச்சிகள். அவள் அடுப்புத் தீக்குச் சேமித்து வைத்தது.

அந்தப் பறவை, குயில் குஞ்சு போலிருக்கிறது.

“பாரடி! இந்தக் குஞ்சு குயில்போல் இருக்கு காக்கைக் கூட்டில் இருந்து காக்கைச் சனியன்கள் குஞ்சு பொரித்து வளர்த்தபிறகு தன் இனமில்லை என்று தள்ளிவிட்டிருக்கு போல. இது தீனமாகக் கத்துது. உன் பிள்ளைகள் ரெண்டும் அதை இன்னும் அடிச்சுக் கொல்லுதுங்க!” என்று குச்சியைப் பிடுங்கி எறிகிறாள். குச்சி போன ஆத்திரத்தில் ஒல்லியான பிள்ளை அவளை அடிக்கக் கை ஓங்குகிறது. ஒல்லிதான் மூத்தது. குண்டு இளையதாம். அதுதான் முதலில் வந்தது.

பூமகள் பரபரப்புடன் கூடை போன்ற ஒரு மூங்கில் தட்டைக் கொண்டு வந்து, இலை சருகுகளைப் போட்டு அப் பறவையைப் பக்குவமாக எடுத்து வருகிறாள். தடவிக் கொடுக்கிறாள்; இதம் செய்கிறாள். சிறகொடிந்த நிலையில் தொங்குவதுபோல் காயம்.

“பெரியம்மா, நீங்கள் கொஞ்சம் பார்த்துக் கொண்டிருங்கள். சம்பூகனைக் கூட்டி வருகிறேன்! அவன் வந்தால் நிச்சயமாகப் பறவையைப் பிழைக்க வைத்து விடுவான்!”

“முதலில் இந்த துஷ்டப் பிள்ளைகளின் கைகளைக் கட்டிப்போடு கூத்திரிய வித்து. தானாக வருகிறது. கொலைத் தொழில். அது பரிதாபமாக கத்துகிறது. இதுங்க ரெண்டும் மாறி