பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

151

மாறி அடிச்சிச் சிரிச்சுக் கும்மாளி போடுதுங்க! உன் வயிற்றில் போய் இதுங்க பிறந்ததே!”

இரண்டு பேரையும் இழுத்து வருகிறாள் பெரியன்னை. இரண்டும் பெருங்குரல் எடுத்து அழுகின்றன.சிறுகுடி லின் பக்கம் முறத்தில் தானியம் உலர வைத்திருக்கிறார்கள். இந்தப் பெருங்குரலின் ஒசையில், புல்பறித்துக் கொண்டிருந்த கோமா ஓடிவருகிறாள். பருத்த தனங்கள் அசைய, பிள்ளை பெற்றதன் அடையாளமான வரிகள் தெரிய, மரவுரி நழுவ அவள் “ஏன் புள்ளைய அடிக்கிறீங்க!” என்று வருகிறாள். “சோமா, நீ முதலில் உன் இடுப்புக்கச்சையை ஒழுங்காகக் கட்டு இந்த வாண்டுகளுக்கு அப்புறம் பரிந்து வா! இது காக்கைக் கூட்டத்துக் குயில்களில்லை. குயில் கூட்டத்துக் காக்கைகள்: உக்காருங்க, இங்கே! எந்திருந்தா அடிச்சிடுவேன்!” என்று அதட்டி, ஒரு மரத்தடியில் உட்கார வைக்கிறாள்.

“சோமா, நல்லவேளை, நீ வந்தாய், போய் எங்கிருந்தாலும் சம்பூகனைக் கூட்டிவா! அவன் தொட்டாலே இந்தப் பறவை எழுந்துவிடும்.”

“வனதேவிக்குமேலா? என்ன ஆச்சு, என்ன பறவை?. பறவை சோர்ந்து கிடக்கிறது. அதன் இதயத்துடிப்பைப் பார்க்கும்போதே உணரமுடிகிறது.”

“காக்கா கூட்டுல முட்டவக்கிற கரும்பறவை. பெரிசானபிறகு நம் இனமில்லைன்னு தள்ளிவிடும். அதுக்கு பெரியம்மா ஏன் பிள்ளைங்களைக் கோவிக்கனும்?”

“கோவிக்கனுமா? ஆளுக்கொரு குச்சியெடுத்திட்டு அதை அடிச்சி வதைக்கிறாங்க. அது ஈனமாக் கத்துறதப் பார்த்து சிரிக்கிதுங்க! அதே போல் இதுங்கள அடிச்சி, அந்த வலி என்னன்னு தெரிய வைக்கணுமில்ல’

சோமா அவர்கள் இருவரையும் இரண்டு இடுப்பிலும் இடுக்கிக் கொண்டு கன்னங்களில் முத்தம் வைக்கிறாள்.