பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

வனதேவியின் மைந்தர்கள்

“யாரு... கிழவி?... நீங்க கருப்பந்தடி பயிர் பண்ணி, இடிச்சுச்சாறு பண்ணி புளிப்பேத்தி பானகம் காய்ச்சுறீங்க?” என்று கேட்கிறாள். அவள் பொக்கைப் பல்தெரியச் சிரிக்கிறாள்.

“ஆமாம் பெரியம்மா... முன்னெல்லாம் இலுப்பபூ நொதிக்க வச்சி எடுப்போம். இப்ப இதும் செய்யிறாங்க...”

“அதான் நீ குடிச்சிட்டு வந்து கதை சொல்லுற நல்லாக் கதை சொல்லுவா”

“எம்புள்ளங்களும் இதான் சொல்லும்...” முகமலர்ந்த சிரிப்பு.

“கருப்பந்தடி இருக்கா? ஒடிச்சி, இந்தப்புள்ளங்க பல்லுல கடிக்கக் கொண்டாயேன்”

கிழவி திரும்பிப் போகிறாள்.

தன்னுடைய பிறப்பின் இரகசியம் தெரியக்கூடாதென்று இந்த அன்னை பாதுகாக்கிறாளோ?...

“பெரியம்மா அவளை ஏன் அனுப்பினீர்கள்? அவள் குருமாதா, தேவதை என்றெல்லாம் என்ன பேசினாள்?”

“குருமாதா என்று சொன்னது, குருமாதாவை - யாவாலி அம்மை. அடிமையின் மகன் குருவைத் தேடி குருகுல வாசம் முடித்துத் திரும்பி வரும் வரை இருந்தாள். அவர் வருவதற்குள் யானை மிதித்து அடக்கமானாள். அந்தக் கதையைச் சொன்னாள். குருமாதாவே பிறகு அரசர் மாளிகையில் வளர, பூமிக்குள் குழந்தையாகச் சென்றாள் என்று கதை சொல்கிறாள்...”

“பெரியம்மா, நீங்களும் இந்த இடத்துக்கு உரியவரில்லை. நீங்கள் எப்படிக் கானகத்துக்கு வந்தீர்கள்?”

“நீ எப்படி வந்திருக்கிறாயம்மா?...”

மெல்லிதழ்கள் துடிக்கின்றன. அவளைத் தழுவிக் கொள்கிறாள்.

அரச மாளிகையில் அடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு பெண்ணைச் சுற்றியும் இப்படிச் சிலந்தி வலைகள் பின்னப்-