பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

வனதேவியின் மைந்தர்கள்


“அம்மா, சம்புகன் வர மாட்டானா?”

குழந்தைகளின் கேள்விக்கு விடையளிக்க இயலாமல் அவர்களைத் தழுவிக் கொண்டு பூமகள் கண்ணிர் உகுக்கிறாள்.

“அஜயா, விஜயா, அதோ பார்!” என்று சத்தியர் சிறுவர்களைப் பற்றிக் கொண்டு வானத்தைக் காட்டுகிறார்.

வானில் ஒளித்தாரகை ஒன்று மின்னுகிறது.

“அதோ பார்த்தீர்களா? சம்பூகன் அங்கேயிருந்து நம்மைப் பார்த்துக் கொண்டே இருப்பான்!”

நந்தமுனி குழலை எடுத்து மண்ணைத் தட்டித் துடைத்து, மாதுலனிடம் கொடுக்கிறார்.

“பையா, குழலூது சம்பூகன் எப்போதும் கேட்டுக் கொண்டிருப்பான். இன்னும் இன்னும் இந்தத் தாயிடம் எண்ணில்லாச் சம்பூகர்கள் தோன்றுவார்கள். குழல் ஊது குழல் ஊது குழல் ஊது!”

மாதுலன் குழலை உதடுகளில் பொருத்தி இசைக்கிறான்.

சோகம் பிரவாகமாக அந்த இசையில் பொங்கி வருகிறது.


19

          “செங்கதிர்த் தேவனை வந்தனை செய்வோம் -
          எங்கள் உள்ளங்களில் ஒளி பரவட்டும்!
          மங்கல ஒளியோய், மலர்களின் நாயக!
          எங்கள் மனங்களின் மலங்கள் அகற்றுவீர்!
          எங்கள் செயல்களில் வந்து விளங்குவீர்!
          எங்கள் சொற்களில் இனிமை கூட்டுவீர்.”

வேடப்பிள்ளைகளோடு அவள் பிள்ளைகள் காலை வணக்கம்பாடும்போது, பூமகளின் மனம் விம்முகிறது.சம்பூகனின் மறைவு ஏற்படுத்திய வடு காய்ந்து, ஒன்பது வேனில்கள் கடந்திருக்கின்றன. வேடப்பிள்ளைகளைப் போன்றே இவர்களும்