பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

187

இவர் வரும்போது, தானிய மூட்டை வரும்; ஆடைகளும்கூட வரும். சில சமயங்களில் தடாகக் கரையில் அமர்ந்து பெரியன்னை பேசுவதைக் கண்டிருக்கிறாள். தன் பிறப்பைப் பற்றிய ஏதோ சில உண்மைகள் பட்டு இழைகள் போல் சங்கேதங்களால் மறைக்கப்பட்டிருப்பதாக எண்ணுவாள். இப்போது அவள் நிறைவாக அமைதியாக இருப்பதால் அந்த சந்தேகங்கள் எவையும் அவளுடைய ஆர்வத்தைத் துண்டுபவையாக இல்லை.

“பெரியம்மை, கச்சலன் வந்திருக்கிறேன்..!

மரத்தடியில் புற்றரையில் இருக்கும் பெரியன்னை பார்வையை நிமிர்த்திப் பார்க்கிறாள்.

‘யாரோ, ராசா வூட்டு ஆள் போல்” என்று லு சாடை காட்டுகிறாள். வாய்கள் மூட நா உள்ளே அமைதி காக்க, கொட்டை உடைபடும் மெல்லோசை மட்டும் கேட்கிறது.

“உருமு. வந்தவருக்குத் தண்ணிர் கொண்டு வந்து கொடு.”

“இல்லை தாயே, தடாகக் கரையில் எல்லாம் செய்து கொண்டு இளைப்பாறி வருகிறோம். கொஞ்சம் தானியம் கொண்டு வந்திருக்கிறோம். இங்கே கொண்டு வருவார்கள்.”

அவர் சொல்லி முடிக்கு முன், தானிய முட்டைகளைச் சுமந்து இரண்டு ஆட்கள் அங்கே வந்து, நீள்சதுரக் கொட்டடியில் இறக்குகிறார்கள்.

“அது சரி, நான் சொன்ன விசயம்.?”பெரியன்னையின் குரல் இறங்குகிறது.

“சொன்னேன். குரு சதானந்தரைப் பார்த்தேன். அவர்கள் இப்போது அதிகமாகப் பரபரப்பாக இருக்கிறார்கள். அயோத்தியில் பெரிய யாகம் செய்ய ஏற்பாடெல்லாம் நடக்கிறது. ராசகுமாரி ஊர்மிளா, மாண்டவி எல்லாரும் வந்து போனார்கள். அரசகுமாரர்களுக்கு எல்லாம் பயிற்சி குருகுலவாசம் முடியப் போகிறதாம். கொண்டாடப் போகிறார்கள்.”