பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

193

"புரியவில்லை என்றால் அந்த மரமண்டை தமனகனிடம் கேள்! மிதுனபுரியில் இருந்து வந்தானே, காவலன், அவனிடம்...”

“நீர் தாம் இப்போது எனக்கு விளக்கத் தெரியாத மரமண்டை போல் பேசுகிறீர்!...”

இவர்கள் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கையில் மரத்தில் இருந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த கிழட்டு நாமதாரிப்பூனை, கரகரவென்றிரங்கி நொடிப் பொழுதில் ஒரு புறாவைக் கவ்விச்சென்றுவிட்டது. அது சென்றதைப் பார்த்த பூமகள் திடுக்கிடுகிறாள். விஜயனின் சிரிப்பொலி கேட்கிறது.

“உம் சத்தியத்தைப் பூனை கவ்விக் கொண்டு சென்று விட்டது?”

அஜயன் எத்தகைய சலனமுமின்றி அதே கூர்மையுடன் விடையிறுக்கிறான். “இதுவும் சத்தியமே. அந்தப் பூனை பசியாக இருந்திருக்கும். அது மூப்பினால் ஓடியாடி இரை பிடிக்க முடியாது. பறவைக்குத் தானியம் தூவியதால், பறவைகள் சேர்ந்து வந்தன. அவற்றில் ஒன்று பூனையின் பசிக்குமாகிறது. எனவே, இதுவும் சத்தியம் தான்!”

“ஒரு பறவையை யமனிடம் இருந்து உம்மால் காப்பாற்ற முடியவில்லை. இதை ஒத்துக் கொள்ளுங்கள். பின் எதற்காக, நமது குருநாதர் வில்-அம்பு, போர்ப் பயிற்சி என்று கற்பித்திருக்கிறார்? வில்-அம்பு-வித்தை இந்த மாதிரியான நேரங்களில் பயன்பட வில்லை என்றால், விரோதிகளிடம் இருந்து எப்படி மக்களைக் காப்பாற்ற முடியும்?”

“விரோதிகள் என்பவர் இருந்தால் தானே, அந்தச் சங்கடம் வரும்?” விஜயன் கேலியாகச் சிரிக்கிறான்.

“இது மிக நல்ல யோசனைதான். அப்படியானால் குருநாதர், நமக்கு ‘மந்திர-அஸ்திரம்’ என்ற வித்தையையும் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லையே?”

“தெரிந்திருக்க வேண்டும். ஆனால் பயன்படுத்த வேண்டியதில்லை; பறவைகளும், விலங்குகளும் நமக்குப் பகைவர்கள்

வ. மை. - 13