பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

197


தாயின் இழிந்து தொங்கும் செவிகளைப் பார்த்தவண்ணம் நிற்கிறாள். கன்னங்கள் வற்றி. சப்பிய மாங்கொட்டையாய்த் தலையும், அகன்ற நெற்றியும். எந்த இரகசியத்தைக் கட்டிக் காக்கின்றன?

“அடி, கண்ணம்மா, புல்லியின் ஆண், பெரிய பன்றி அடித்துக் கட்டிக் கொண்டு போகிறான். வலையில் விழுந்தது என்றான். அவன் சொன்ன சேதி கேட்டதிலிருந்து எனக்கு வெலவெலத்து வருகிறது. கச்சலன் வந்தபோது அரசல் பொரசலாகக் கேள்விப்படடது, நிசந்தான். யாகம் செய்கிறார் களாம். யாகம். மந்திரம் சொல்லி நீர் தெளித்துக் குதிரையை விரட்டியாயிற்றாம். அந்தக் குதிரை அடி வைத்த மண்னெல்லாம் அவர்களுக்குச் சொந்தம். மிதுனபுரிப்பக்கம் வந்திருக்கிறதாம். அவர்கள் கோட்டைக் கதவுகளை மூடி விரட்டி விட்டார்களாம். என்ன அநியாயம் பாரடி?”

அவள் எதுவும் பேசவில்லை.

இந்தப் பிள்ளைகளும் மற்ற பிள்ளைகளுடன் தேனெடுக்கப் போகிறோம் என்று நின்றார்கள். உடம்பெல்லாம் பச்சிலையைப் பூசிக் கொண்டு தேனெடுக்கப் போவது விளையாட்டாக இருக்கிறது. எனக்கென்னமோ இன்று அனுப்ப வேண்டாம் என்று தோன்றிற்று. அடுத்த முறை போகலாம் என்றேன்.” என்று காரணம் புரியாமல் மழுப்புகிறாள்.

இவளுடைய அடிமனதில் கச்சலர் கூறிய ‘யாகம் மனதில் படிந்து இருக்கிறது. இப்போது கேள்விப்பட்டிருக்கும் செய்தி..?

யாகக் குதிரையுடன் ஒரு படையும் வரும்.

“அவன் வேறு என்னவெல்லாமோ உளறுகிறான். யாகம் செய்யும் ராசாவுக்கு ராணி இல்லையாம். ராணியைப் போல் தங்கத்தால் ஒரு பிரதிமை செய்து வைத்திருக்கிறார்களாம். பெரிய பெரிய ரிசி முனிவர்கள், ராசாக்கள், எல்லாரும் கூடிச் செய்யும்

யாகமாம். ஒருவருசம் ஆகுமாம்.” முதியவள் முணுமுணுத்துவிட்டு அவளைப் பார்க்கத் தலை நிமிருகிறாள். “என்னது? தாயே? என்