பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

201


21

பூமகளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

“வாருங்கள். நாம் சத்திய முனியிடம் போய்ச் சொல்வோம், அஜயன், விஜயன், நீலன் எல்லோரும் அங்குதான் போயிருக் கிறார்கள்.”

அவர்கள் செல்கிறார்கள்.வாழைவனத்தின் குறுக்கே நடந்து செல்கின்றனர். உச்சிக்கு வந்த பகலவன் மேற்கே சாயும் தருணம். கானகத்தின் ஆரவாரங்கள் இனிமையான சில ஒசைகளுள் அடங்கும் நேரம்.

ஆசிரமத்தில் பிள்ளைகள் எல்லோரும் இருக்கிறார்கள். நந்தமுனி மட்டுமே அவர்களுக்கு ஏதோ ஒர் ஆட்டம் பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறார். மரங்களின் மேலிருந்து பிள்ளைகள் பறவை போலும், விலங்குகள் போலவும் ஒசை எழுப்புகிறார்கள்.

எந்தப் பறவை எந்த மரத்தில் இருந்து ஓசை எழுப்புகிறது என்று கீழிருக்கும் பிள்ளை சொல்ல வேண்டும். அவன் பார்வை மறைக்கப் பட்டிருக்கிறது.

ஒரே காலத்தில், பல்வேறு பறவைக் குரல்கள் ஒலிக்கின்றன. பையன் இங்கும் அங்கும் ஒடுகிறான். அஜயன்தான். இதோ நாகன வாய்ப்புள். இதோ, நீலகண்டப்பறவை. இதோ.. இதோ இது தான் செம்போத்து. “ஹறி.ஹி..ஹி.ஈ.ஈ.” என்ற ஒலி விசித்திரமாகக் கேட்கிறது. மகிழமரக் கிளையில். அவள் பார்க்கிறாள். விஜயன். ‘இது ஒன்றும் பறவை இல்லை” “பொய். பறப்பது எதுவும் பறவை தானே?”

‘ஒத்துக் கொள்ளமுடியாது. ஈ. ஈ. என்ற ஒலி, குதிரைக் கனைப்பு” என்று அஜயன்கண் கட்டை அவிழ்த்துப்போடுகிறா ன்.