பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

வனதேவியின் மைந்தர்கள்


“குதிரை பறக்குமோ?.”

“ஏன் பறக்காது? அந்த அசுவ மேதக் குதிரை பறந்துதானே நம் வனத்துக்கு வந்து இறங்கி இருக்கிறது?”

பூமகள் அடுத்த அடியை எடுத்து வைக்காமல் மரத்தோடு சாய்ந்து நிற்கிறாள்.

“குதிரை பறப்பது என்பது புரளி. அப்படியே பறந்தாலும் ஈ. ஈ. என்று கனைக்காது, விர் விர்ரென்று பெரிய சிறகுகளை

அடித்துக் கொண்டு நீண்ட ஒலி எழுப்புமாக இருக்கும்!”

“சரி அப்படியே வைத்துக் கொள்வோம். அது எப்படி ஆறு தாண்டி, நமது வனத்துக்குள் வந்தது?”

“நீந்தி வந்திருக்கும்.”

“அதன் மேலுள்ள பட்டுப் போர்வை, நனையவில்லை; கலையவில்லை, உடம்பு நனைந்திருக்கவில்லை.”

“சூரியனின் ஒளியில் ஈரம் காணாமல் போகும் என்பது கூடவா தெரியாது?”

‘அஜயா, விஜயா, அந்தப் பக்கம் இருந்து ஒடத்தில் ஏற்றி, இங்கே கொண்டு விட்டிருக்கலாம் இல்லையா?” என்று நீலன் கூறுகிறான்.

“எதற்கு அப்படி விடவேண்டும்? யார் விட்டிருப்பார்கள்?”

“மிதுனபுரிக்கப்பால் ராசா படை வந்திருக்குதாம். நேத்தே எங்க அப்பன் பார்த்துச் சொன்னார். மிதுனபுரி போய், தோல் கொடுத்து விட்டு, பெரிய பானை வாங்கிட்டு வரப் போனார். அப்ப குதிரை, யானை, கொடி குடை, எல்லாம் பார்த்தாராம். கோட்டைக்கு வெளியே, பெரிய மரத்தடியில் கூரை கட்டி அங்கு ராசா இருந்தாராம்!”

“மிதுனபுரிக் கோட்டைக்குள் போக அங்கே இடமே இல்லையாம். தோலை எல்லாம் ராசாவின் ஆளுங்களே வாங்கிட்டு, தங்கக்காக குடுத்தாங்களாம். எங்காயா சண்டை