பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

207

          அத்திர சாத்திரம் அறிந்தாலும்,
          ஆருக்கும் தீம்புகள் செய்யோம் யாம்!
          கோத்திர குலங்கள் எமக்கில்லை. .
          குண தேவி பெற்ற மைந்தர்கள் யாம்.”

மனசுக்கு இதமாக இருக்கிறது. திருப்பித் திருப்பிப் பாடிக் கொண்டே அவர்கள் தங்கள் இருப்பிடத்துக்கு வருகிறார்கள்.

அங்கே இலுப்பை மரத்தின் அடியில். வெண்மையாக, பகவோ? காத்யாயனிப் பகவுக்கு இப்படி வாலில்லை.

அஜயனும் விஜயனும் பிள்ளைகளும் கூச்சல் போட்டு ஆவாயம் செய்கிறார்கள்.

“அதே நம் குடிலுக்குப் பக்கத்தில், குதிரை, நம்மைத் தேடி வந்திருக்கிறது. நம் அதைத் தேடிப் போ யிருக்கிறோம்!”

ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் அச்சம் மறந்து அஜயன் ஓடுகிறான்.

விஜயன் அவனை முந்திக்கொண்டு அதன் முதுகில் கை வைல்லிறான்

அது லை ஒரு குலுக்குக் குலுக்குகிறது. வண்ணப் பட்டுத்துண்டு பேர்த்து, தோல் வயல் பிணித்திருக்கும் முதுகு வானவில்லின் வழு நிறங்கள் கொண்டாற்போன்று கண்களைக் கவருவதுடன், ‘அருகே வந்து தொடாதீர்கள், நான் எட்டி உதைப்பேன்’ என்று அச்சுறுத்துவது போலும் இருக்கிறது.

இவர்கள் பின்னே நகர, பூமகள் எச்சரிக்கை செய்கிறாள்.

“பிள்ளைகளே, நீங்கள் யாரும் அருகிலே போகாதீர்கள். சத்திய முனிவர் யோசனையின்படி நாம் நடப்போம்.”

“குருசுவாமி மூலிகை தேடி மலைப்பக்கம் போனார். நத்தியின் குழந்தைக்கு இரண்டு கால்களும் பின்னினாற் போல் நிற்க முடியவில்லை. அதற்காக ஒரு மூலிகை கொண்டுவரச் சென்று நான்கு நாட்களாகின்றன. கூடவே சிங்கனும் போயிருக்கிறான்.” என்ற அவர் செய்கி தெரிவிக்கிறார்.