பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

வனதேவியின் மைந்தர்கள்

“மகளே, இந்த நேரத்தில் நீதுன்புறலாமா? நீ பட்டதெல்லாம் கனவு என்று மறந்துவிடு! இனி அதெல்லாமில்லை.” என்று இதம் கூறிய ராணி மாதா.

இவர்களெல்லோருக்கும் அவள் நிலைமை தெரியுமா?

அந்தப்புரம் என்ற கட்டை மீறிக் கொண்டு ஒருவரும் வெளியில் வர முடியாதா?. ஆற்றுக்கரை வேடர் குடியிருப்பில் ஒருநாள் உறங்கினாளே?.

“செண்பக மலர் அலங்காரம் வேண்டாம்! மன்னர் காத்திருப்பார். நேரம் ஆகிறது!...”

துண்டு துண்டாய்க் காட்சிகள். பேச்சொலிகள். வழக்கமான பள்ளி எழுப்பும் பாட்டொலிகள். அரண்மனையின் அலங்காரத்திரைகள், பளபளப்புகள், எல்லாமே ஒன்றுமில்லாத பொய்யாக விளக்கமாகிவிட்டன.

அவளைப் போல் குலம் கோத்திரம் அறியாத பெண்ணுக்கு மகாராணி மரியாதையா?

அடிவயிறோடு பற்றி எரிகிறது.

எழுந்து சென்று, குடிலுக்குள், மண் குடுவையில் இருந்து நீர் சரித்துப் பருகுகிறாள். முற்றத்தில் இருந்து பார்க்கையில் வானில் வாரி இறைத்தாற்போல் தாரகைகள் மின்னுகின்றன. கானகமே அமைதியில் உறங்குகிறது.

மீண்டும்படுத்துப் புரண்டு எப்போது உறக்கம் வந்தது என்று தெரியவில்லை. அமைதியைப் பிளந்து கொண்டு ஓர் அலறல் ஒலி கேட்கிறது. அவள் திடுக்கிட்டுக் குலுங்குகிறாள். குடிலின் பக்கம் ஓர் ஓநாய், வாயில் எதையோ கவ்விக் கொண்டு செல்கிறது. அதுமானோ, ஆடோ, பசுவின் பகுதியோ என்று இரத்தம் உறைய நிற்கிறாள். மயில் கூட்டம் கூட்டமாகப் பறந்து ஓலம் இடுகிறது மயில் அகவும்; அதன் ஓலமா இது? கானகமே குலுங்குவது போல் இந்த ஓலம் நெஞ்சைப் பிளக்கிறது. ஓநாய், மயிலையா கவ்விச் சென்றது? ஓநாய். சம்பூகன் ஓநாய்க்குட்டிக்குப் பால் கொடுத்து