பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

வனதேவியின் மைந்தர்கள்

“யாரம்மா?.”

“அ. அவர்கள். குதிரைக்கு உரியவர்கள்!”

“யார், உன் நாயகனா? அவன் தம்பியா?”

“இருவரும் இல்லை. ஒரு பிள்ளை நம் அஜயன் விஜயன் போல் ஒரு பிள்ளை.”

“படை வந்திருக்குமே?”

அவள் வாளாவிருக்கிறாள்

“ஏனம்மா மவுனம் சாதிக்கிறாய்! வந்திருப்பவன் பட்டத்து இளவரசனா? உன் பிள்ளைகளின் உடம்பிலும் கூத்திரிய ரத்தம்தான் ஒடுகிறது. நினைவில் வைத்துக் கொள்!”

“நான் என்ன செய்யட்டும் தாயே? அந்தப் பிள்ளை வில். அம்புசுமக்கவில்லை. காவலர் மட்டும் இருவர் வந்திருக்கிறார்கள்”

“நீ தலையிடாதே. எப்படியேனும் குதிரையைக் கொண்டு செல்வார்கள் ஒன்றுமே நடவாதது போல் இரு!”

“எப்படி?” என்று பூமகள் சிந்திக்கிறாள். வந்திருப்பவன் ஊர்மிளையின் மகன். அவள் சாயல் அப்படியே இருக்கிறது. ஊர்மி. கவடில்லாமல் இருப்பவள். அவள் பிள்ளை, அவன் வில்லும் அம்பும் இல்லாமல்தான் வந்திருக்கிறான். அவனைக் கூப்பிட்டு உட்கார வைத்து,நம்பிள்ளைகளுடன் ஒருவாய் கூழோ, எதுவோ கொடுக்காமல் பாரா முகமாக இருக்கலாமா?

“கண்ணம்மா, நீ என்ன நினைக்கிறாய் என்று புரிகிறது. நீ இவர்களை உறவு கண்டு புதுபிக்கப் போகிறாயா? அவர்கள் தந்திரமாக உன் பிள்ளைகளை வெல்ல வந்திருக்கிறார்கள். கோத்திரம் தெரியாத பெண்ணின் வயிற்றுப் பிள்ளை பட்டத்து இளவரசனாக முடியாது.”

இந்த முதியவள் எதற்காக இன்னமும் இருக்கிறாளோ என்றுகூட பூமகளுக்கு இப்போது தோன்றுகிறது.