பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

227

காவலர்களில் ஒருவன் எழுந்து தரையைத் தட்டி உரக்கக் கத்துகிறான்.

“துட்டவேடப்பிள்ளைகளே! எங்கள் அரசகுமாரன் சந்திர கேதுவையும், அரசகுலத்தையும் பழிப்பதே உங்கள் நோக்கமாக இருக்கிறது! நீங்கள் ஏழுலகும் புகழும் அயோத்தி மாமன்னரின் வழித்தோன்றலுடன் பேசுவதாக நினைவிருக்கட்டும். இப்போது எங்கள் யாகக் குதிரை இங்கே தடம் பதித்ததால், இந்த இடம் எங்கள் மாமன்னருக்கு உரியதாகிறது...” என்று கையில் உள்ள தண்டத்தினால் மீண்டும் தட்டுகிறான்.

குதிரையின் அருகில் நின்றிருந்த நந்தமுனி, யாழை மீட்டியவாறு வெளிப்பட்டு வருகிறார்.

“குதிரை தடம் பதித்தால் உங்களுக்குச் சொந்தமோ? அது என்ன சாத்திரம் ஐயா? நீங்கள் இங்கே வரும் முன்பே நாங்கள் தடம் பதித்து விட்டோம்! உங்கள் குதிரையின் குளம்படி களைவிட, எங்கள் தடம் சிறந்தது. இந்த வனதேவியின் மைந்தர்கள் நாம்!”

நந்தமுனி புன்னகை செய்கிறார்.

“அதெப்படி? நீங்கள் க்ஷத்திரிய குலமல்ல; அந்தணரும் அல்ல; முப்புரி நூல் இல்லை ; வில் வித்தை பயிலவில்லை ?.... பூமி சொந்தமோ?...” சிரிப்பு ஏளனமாக ஒலிக்கிறது.

“ஏ, மூட அரசகுமாரா? யார் வில்வித்தை பயிலாதவர்கள்! எங்கள் குரு எங்களுக்குச் சகல வித்தைகளையும் கற்பித்துள்ளார். ஆனால் அந்த வித்தையை உயிர்க்கொல்லியாகப் பயன்படுத்த மாட்டோம்! நீங்கள் விளையாட்டுக்கு வேட்டையாடுவீர்கள்; கொல்வீர்கள்...”

விவாதம் கூர்மையாக முற்றுகிறது; ஆனால் இதில் நன்மை விளையும் என்று தோன்றவில்லை. கனி இனிமை; அதன் சதையில் முள் இருப்பதை நீக்கியாக வேண்டும்?

“க்ஷத்திரிய தர்மம் கொல்வதை அனுமதிக்கிறது. எங்கள் மாமன்னர், யாரும் இதுநாள் கண்டிராத அளவில் பெரும்