பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

229

அங்கே, அவள் காண்பது மெய்யா?.

கண்களைத் துடைத்துக் கொண்டு பார்க்கிறாள். குதிரை.

‘நான்தான் வனதேவி’ என்று சொல்வது போல் அது கனைக்கிறது.

ஒரு பக்கம் மகிழ்ச்சி ஒரு புறம் அச்சம்; அதோடு இணையும் கவலை. அவள் இதைத் தெரிவிக்கவில்லை என்றாலும் பிள்ளைகள் காணாமல் இருப்பார்களா?

மகிழ்ச்சி ஆரவாரம் ஆட்டபாட்டங்களுடன் குதிரை வனத்தை வலம் வருகிறது.

“இந்தக் குதிரைக்கு சக்ஷத்திரிய தருமம் பிடிக்கவில்லை.’

“பிள்ளைகளா, பேசாமல் ஆற்றுக்கரையில் இறக்கி விடுங்கள். இப்போது நீர்வற்றிச் சுருங்கிய இடத்தில் இறக்கிவிட்டால் தாண்டி அக்கரை போய் விடும். நமக்கு எதற்கு வீணான வேதனைகள்!”

நந்தமுனியினால் எந்த ஒரு தீர்வையும் கொண்டு வர இயலவில்லை.

அன்று பகல், வனமே கலகலத்துப் போனாற் போல் பறவைக் கூட்டங்கள். கல்லடியோ வில்லடியோ பட்டாற்போல் விழுகின்றன. அமைதியாகக் கிடந்த நாகங்கள் அமைதி குலைந்தாற்போல் வெளியே நடமாடுகின்றன.

பூமகள் கனவு கண்டாளே, அது மெய்ப்பட்டுவிட்டாற் போல் நடுங்குகிறாள். பிள்ளைகளைத் தேடியவாறு செல்கையில், பச்சைக்கிளி ஒன்று அவள் காலடியில் வீழ்கிறது. நெருப்பில் துவண்டாற் போல் விழுந்த அதை அவள் கையில் எடுத்துத் தடவுகிறாள். நெஞ்சம் பதைபதைக்க அவள் “அஜயா, விஜயா, நீலா!.புல்லி.” என்று கூவுகிறாள். இது வேனில் காலம் எங்கேனும் காட்டுத்தீயா? காட்டுத்தீ பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாள். ஆனால் கண்டதில்லை. குடில்களனைத்தும் காய்ந்த புல்லினால் வேயப்பட்டவை. மரங்கள் எதுவும் மொட்டையாக இல்லை. பட்டிலவுகூடத் துளிர் விட்டிருக்கிறது. அது காய் வெடித்துப்-