பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

வனதேவியின் மைந்தர்கள்

பட்டிழைகளைப் பறக்க விடும்போது சிறுமியர் அதைச் சேகரித்து வருவார்கள். இப்போது அந்த மரத்தினும் செந்துளிர். அவள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே புறாக்கள், மைனாக்கள், காகங்கள் வீழ்கின்றன.

எங்கோ சிங்கம் உறுமுவதுபோல் ஒரு பேரோசை கேட்கிறது.

அப்போது அங்கே மாயன் எதிர்ப்படுகிறான்.

‘மாயா? நீயா நச்சம்பு விட்டாய்?”

அவன் கையில் வில்லும் கூரம்பும் இருக்கின்றன.

“இனிமேல்தான் விடவேண்டும். என்ன செய்திருக்கிறார்கள் பார்த்தீரா வனதேவி? மந்திர அஸ்திரம்’ என்று விட்டிருக்கிறார்கள். பேய் பிசாசுகள். பறவைகளைச் சாக அடிக்கின்றன. பசுக்கள் மூர்ச்சித்து விழுந்திருக்கின்றன.”

அவன் பேசுவது சாடையாகவே இருக்கிறது. “நீ நச்சம்பா வைத்திருக்கிறாய்?”

“ஆமாம்.”

“வேண்டாம் நம்மவருக்கு அதனால் ஆபத்து வரும்.”

‘வராது. அவர்களெல்லாரும், அருவிக்கரை தடாகத்தில் பத்திரமாக இருக்கிறார்கள். நான் ஒரே ஒரு அம்பு போட்டு, இவர்களுக்கு நம்மை யாரென்று காட்டுவேன். வனதேவி! இதோபாரும் பட்சி துடிதுடித்து விழுவதை?.”

கொத்தாகத் தேன் சிட்டுகள் புற்றரையில் விழுந்திருக் கின்றன.

“குதிரையை விரட்டிவிடவில்லையா?”

“அது போக மறுக்கிறது. வனதேவி, அதை அறுத்து யாகம் செய்வார்களாம். அதற்கு அது தெரிந்துதான் போக மறுக்கிறது. இந்த உயிர்களுக்கெல்லாம், நம்மைவிட முன்னுணர்வு.”

“சரி, நீ இப்போது யாரைக் கொல்லப் போகிறாய்?”