பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

வனதேவியின் மைந்தர்கள்

பறவைகளுடனும், மான்-பசு-முயல், அணில் என்ற உயிரினங் களுடனும் தோழமை கொண்டு உலகை அன்பால் ஆளவந்த தொரு சிறுமியை நினைத்துக் கொண்டு வந்தேன். அந்தச் சிறுமி, அரண்மனையின் பெருந்தோளர்களினால் தூக்க இயலாத மூதாதையர் வில்லை, அனாயசமாகத் தூக்கி, அடிபட்டு விழுந்த தொரு கிளிக் குஞ்சைக் கையிலெடுத்து, தன் அன்பு வருடலாலேயே உயிர்ப்பித்த அதிசயம் கண்டிருக்கிறேன். தாய்தந்தை தெரியாத இந்தக் குழந்தைக்குரிய மணாளனை எப்படித் தேடுவேன் என்று உன்னை வளர்த்த தந்தையின் கவலையை நீ எப்படித் தீர்த்து வைத்தாய்!..”

“சுவாமி, நான் பேதையாக இங்கேயே அமரவைத்தேனே? உள்ளே வாருங்கள்!” இன்ன செய்வதென்றறியாதவர் போல் தன் பட்டு மேலாடைத் துகிலால் அவர் பாதங்களைத் துடைக்கிறாள் பூமகள். மலர்த்தட்டை ஏந்தி விரைந்து வருகிறாள் விமலை...

மணமிகுந்த சம்பங்கி, பன்னீர் மலர்கள்.

“உள்ளே வரவேண்டும், சுவாமி!...”

அந்த இசைக்கருவியை, கையில் எடுத்துக் கொள்கிறாள்.

“குழந்தாய், இந்த இடமே நன்றாக இருக்கிறது. இதுவே என் அன்னையின் இடம்....எத்துணை அழகான வேலைகள்! செய்குளங்கள்...! உன் மன்னரின் வீரச் செயல்கள் பற்றிக் கேட்டேன். கடல்கடந்து அரக்கர் குலத்தை அழித்து, உன்னை மீட்ட பெருமை - புகழ் எட்டுத் திக்கிலும் பரவி இருக்கிறது தாயே !...”

அவள் மலர் முகம் முள் தைத்தாற் போன்று சோர்ந்து வாடுகிறது.

“நான் கண்டு அறிந்த செல்வி, மாசு மறு ஒட்டாத நெருப்பு, ஈரேழ் உலகும் போற்றக்கூடிய ஒரு மனிதரின் நாயகி. இந்த மனிதர், அந்த மாமணியை நெருப்புக் குண்டத்தில் இட்டுப் பரிசோதித்தார் என்ற செய்தி பொய்யாகத்தானிருக்கும் என்று கருதினேன்.

இந்த மக்கள் தாம் எப்படி மணலைக் கயிறாகத் திரிக்கிறார்கள்! கொடிய நஞ்சுப் பாம்பு என்று அச்சுறுத்துகிறார்கள்!...