பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

வனதேவியின் மைந்தர்கள்

அப்போது. மத்தன். யானைக்கூட்டம் பிளிறலுடன் வந்து அஞ்சலி செய்ய வருகின்றது. வேடமக்கள் அனைவரும் ஒதுங்குகின்றனர். அவள் அந்த யானையில் அருகில் சென்று அதன் காலைப் பற்றிக் கொண்டு கண்ணிர் உகுக்கிறாள்.

“இம்சையில் இருந்து அனைவரையும் விலகச் செய்த எந்தையை யாரோ கொடிய அம்பு கொண்டு துளைத் திருக்கின்றனர், மத்தராஜனே!” என்று புலம்புகிறாள்.

மிதுனபுரியில் இருந்து ஒரு கூட்டம் வருகிறது. பாதம் வரை தொங்கும் ஆடை அணிந்த பெண்கள். தலையில் துண்டு அணிந்து திறந்த மார்புடன் ஆண்கள், மூங்கில் கொம்புகளாலான ஒரு பல்லக்கில், ராணியம்மாவைச் சுமந்து வருகிறார்கள்.

“பெரிய ராணி வாராங்க!.”

பூமகள் கண்கள் அகலப் பார்க்கிறாள். ஒருகால் கேகயத்து மாதாவோ?

சிவிகையைக் கீழே வைக்கிறார்கள். மெல்ல இருவர் சிவிகையில் இருந்த அவளைத் தூக்கிப் புற்பரப்பில் அமர்த்துகின்றனர். அந்த அன்னை, கூரிய நாசியும் அகன்ற நெற்றியும்.

ஒ. இவர்தாம் மிதுனபுரி ராணி மாதாவா? தலை மூடிய துண்டு. பாதம் வரை, ஆடை, அந்த அன்னை மயிலிறகுகளால் ஆன ஒரு விசிறி போன்ற சாதனத்தால், கால் முதல் தலைவரை தடவுகிறாள். சுருங்கிய விழிகள் பளபளக்கின்றன. மெல்லிய சுருங்கிய உதடுகள் துடிக்கின்றன. பேச்சு எழவில்லை. அப்போதுதான் சத்திய முனிவர் விரைந்து வருவதை அவள் பார்க்கிறாள்.அவர் முகத்தை மூடிக் கொண்டு விம்முவதை அவள் முதல் தடவையாகப் பார்க்கிறாள்.

மிதுனபுரி ராணி மாதாவின் பக்கம் வந்து நின்று குலுங்குகிறார்.

“அம்மையே பாவத்தின் கருநிழல் விழுந்துவிட்டது.”