பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

வனதேவியின் மைந்தர்கள்

அறுசுவையும் எண்ணற்ற வடிவங்களும்,
நீயே யாவாய்!
துன்பம் நீ! இன்பமும் நீ!
நீயே மரணம்! நீயே பிறப்பு
பாவத்தின் கருநிழல்கள் படிந்துவிட்டன.
அன்னையே உன்னைப் போற்றுவோம்!
அவை எங்களை விழுங்காமல் காத்தருள்வாய்’

கீதம் முடியும்போது விம்மி விம்மி அழாதவர் எவரும்

இல்லை என்று தோன்றுகிறது. அஜயனும் அந்தச் சோகத்தில் கரைகிறான். ஆனால் விஜயன் மட்டுமே வேறாக நிற்கிறான்.

“தாத்தா? பாவத்தின் கருநிழல் என்று எதைச் சொன்னிர்கள்? எங்களை வில் அம்பு எடுக்கக் கூடாது என்று ஆணையிட்டு விட்டுத் தாங்கள் இங்கே இல்லாமல் போய் விட்டீர்கள்.அவர்கள் குறிபார்க்கத் தேவையில்லாத போர்க்கால வில்-அம்பு சாதனங்களால் மரம் மட்டை பசுக்கள் இன்னார் இனியவர் என்றில்லாமல் நம்மை அழிக்க முன் வந்தது எதனால்? நம் பசுக்கள் கண்முன் இறந்தன. மாயன் பொங்கி எழுந்து நச்சம்பு போட்டு, பத்துப் பத்தாக, நூறாக, அவர்கள் பக்கம் ஆறு கடந்து கொன்றான். அவன் வீரன்; வீரனாக உயிரைக் கொடுத்தான். நாங்கள் குரு வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, கோழை போல் நின்றோம். எது பாவத்தின் கருநிழல்?”

“விஜயா” என்று பூமகள் கத்துகிறாள்.

‘பாவத்தின் கருநிழல் எங்கிருக்கிறது என்று என்னிடம் கேள்! இவர்கள் பாவத்தின் கருநிழலைத் துடைக்க வாழ்கிறார்கள். அத்தகைய ஒரு பெருமகனை இப்போது அந்த நிழல் விழுங்கிவிட்டது. மகனே, உன் அன்னை கர்ப்பத்தில் உங்களைச் சுமந்து கொண்டு எந்நாள் அநாதரவாகத் திக்குத் தெரியாத கானகத்தில் விடப்பட்டாளோ அன்றே பாவத்தின் கருநிழல் விழுந்துவிட்டது. பெண்ணொருத்தி எந்நாள் கோத்திர மில்லாதவள் என்று சபிக்கப்பட்டாளோ, அன்றே பாவத்தின்