பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

வனதேவியின் மைந்தர்கள்

பெரியன்னை உணவே கொள்வதில்லை. நாளுக்கு நாள் நலிந்து, பேசுவதும் நூலிழையாக நைந்து போகிறது.

“தாயே, சிறிது கூழ் அருந்துங்கள். ஏதேனும் உட்கொண்டு மூன்று நாட்களாகின்றன.”

பூமகளின் முகத்தை நலிந்த கரங்களினால் தடவுகிறான்.

“பிள்ளைகள் எங்கே?.

பூமகள் குடிலின் வெளியே வந்து பிள்ளைகளைக் கூப்பிடுகிறாள். அந்த முற்பகல் நேரத்தில் சுற்றுச்சூழல் தோட்டம் சீரமைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்.

மழைக்காலம் ஒய்ந்ததற்கடையாளமாக, வானவன் வயிரச்சுடர் பொலிகிறான். அமுதம் அருந்திய தாவரங்கள் எத்துணை வண்ணங்களில் அவனுக்கு நன்றி சொல்கின்றன? ரீமுவின் செவலைப் பசு கன்றை ஈன்றிருக்கிறது. அது நிலை கொள்ளாமல் துள்ளி விளையாடுகிறது. யாகக் குதிரை. அதுவும் சற்று எட்ட, இந்த வானகத்திலேயே புல் மேய்ந்து கொண்டி ருக்கிறது. தாறுமாறாக வளர்ந்திருக்கும் பசுமைகளைச் சீராக வெட்டிக் கழிக்கிறான் விஜயன். அஜயன் அவற்றை ஒரமாக அப்புறப்படுத்துகிறான்.

“அஜயா, விஜயா, நாதியம்மா கூப்பிடுகிறார், வாருங்கள்!” அவர்கள் உடனே கைகால்களைச் சுத்தம் செய்து கொண்டு வருகிறார்கள். வரும்போது அழகிய மலர்க்கொத்துகளைக் கொய்து கொண்டு வருகிறார்கள்.

“நாதியம்மா, அஜயனும் விஜயனும் வணங்குகிறோம்.”

பூங்கொத்துக்களை அவள் நலிந்த கரங்களில் வைக்கின்றனர். வெண்மையாக மலர்ந்த அடுக்கு நந்தியாவட்டை அரளி, ஆகிய மலர்கள்.

முதியவளுக்குப் பார்வை துல்லியமில்லை. இருந்தாலும், அவள் காட்டிக்கொள்ளவதில்லை. மலர்களைக் கண்களில் ஒத்திக் கொள்கிறாள்.