பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

249

ஆறுதாண்டிவரவில்லை. மிதுனபுரியையே அழிக்க முனைந்திருக் கிறார்கள். யாருடைய வெற்றி, எதற்கு வெற்றி என்று புலப்பட வில்லை. குதிரை இங்கே இருக்கிறது. அது இப்போது யாகக் குதிரை இல்லை.”

“யாகம் செய்யும் ஆசான்களுக்கு, இப்படிக் குதிரை கட்டறுத்துக் கொண்டு ஏவியவரை உதைத்தால் என்ன செய்வது என்று சிக்கலில் இருந்து மீளத் தெரியவில்லை போலும்.”

இப்போது யாருக்கு வெற்றி, யாருக்குத் தோல்வி?. நந்தமுனியைக் கொன்ற காரணத்தால், மிதுனபுரியே போர்க்கோலம் கொண்டு இவர்கள் படையை அழிக்க முன் வந்து விட்டது.

மாதுலன் வருகிறான்.

அவன் ஏதோ செய்தி கொண்டு வந்திருக்கிறான் என்று புரிகிறது.

என்னப்பா?..

“ராஜா. சேனை. குடை” என்று சைகை செய்கிறான். முனிவர் வெளியே செல்கிறார். பையன்களும் வெளியே தயக்கத்துடன் நின்று பார்க்கின்றனர்.

“வரவேண்டும் மாமன்னா?. வாருங்கள். உள்ளே வந்து, அவர்களை உபசரிக்க, நீர், இருக்கை எல்லாம் எடுத்துச் செல்கின்றனர்.

‘அஜயா, விஜயா, பாட்டனை வந்து வணங்குங்கள்! குழந்தாய், மகளே, வேதபுரி மன்னர்.” -

வேதபுரி மன்னர். அந்நாள் அரக்கமன்னன் அவரை வெட்டிவிட்டதாக அவள் முன் தலையைக் கொண்டு வந்து காட்டச் செய்தபோது, அவள் சுருண்ட அடிவயிறு தொய்ய அழுது துடித்தாளே, அது

நினைவுக்கு வருகிறது. அந்த உணர்வுகள் அனைத்தும் இப்போது இறுகிவிட, அவள் கல்லாகிவிட்டாள்.

வ. மை. -17