பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

259

வந்தாயம்மா?. நலிந்த கைகள் கூந்தலைப் பட்டாகத் தடவு கின்றன.

“நான் இங்குதான் உங்களுடன் இருக்கிறேன் தாயே.. அக்கரையில் மன்னர், என் நாயகர் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கிறாராம். அவர் பிள்ளைகளைப் பார்க்க விரும்புகிறாராம்: இளையவர் வந்திருந்தார். சத்திய முனிவர் அனுப்பலாம் என்றார்; அழைத்துச் சென்றிருக்கிறார். எனக்கு என்ன செய்வதென்று புரியாமல் கவலையாக இருக்கிறது. தாயே!” அவளுக்கு இவள் குரல் கேட்டதாகவே மறுமொழி வரவில்லை.

“அம்மா.. எனக்கு. ஒருவேளை பிள்ளைகளை வைத்துக் கொண்டு என்னைத் தனிமைப்படுத்தி விடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது.”

அன்னை ஒய்ந்து போயிருக்கிறாள். எல்லாத் துடிப்புகளும் ஒய்ந்து இறுதிச் சொட்டுகளில் நிலை பெற்றிருக்கின்றன. அணையும் பொறி. சாம்பல் மூடிவிடாது.

“அம்மா. பெரியம்மா, உங்கள் கண்ணம்மா, என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள்!

“எனக்குக் களைப்பாக இருக்கிறது, மகளே, ராணிமாதாவிடம் கேள். உனக்கு ஒன்றும் வராது; உன் பிள்ளைகள் உன்னைவிட்டுப் போக மாட்டார்கள்.”

பொழுது சாய்ந்து இருள் பரவிவிட்டது. அவர்கள் வரவில்லை. ராணிமாதாவுக்குப் பாலை கறந்து கொடுக்கிறாள்.

அந்திவந்தனத்துக்குப் பிறகு, வேடுவக்குடி சீடப்பிள்ளைகளுடன் முனிவர் இனிய குரலில் தெய்வங்களைப் போற்றும் பாடல் ஒலியில் சிறிது மன ஆறுதல் கிடைக்கிறது. மாடத்தில் திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துச் செல்கிறாள் குந்தி. பொக்கைவாயுடன் முற்றத்தில் பூரு குதித்தாடுகிறது, நிலவும் நட்சத் திரங்களும் செய்யும் மாயம் தோன்றுகிறது.

ஒருகால் இரவு நிலவில் நடந்து வருவார்களோ?