பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

253

“மக்களே.மன்னரிடமே இதைக் கேளுங்கள்’ என்று பூமகள் அவர்களுக்கு கேட்கும் குரலில் கூறுகிறாள்.

அவர்கள் வெளியே வந்து மன்னரைப் பணிகின்றனர்.

விஜயன்தான், ‘பிசிறில்லாத குரலில்’ பேசுகிறான்.

“மாமன்னரே நாங்கள் வனதேவியின் மைந்தர்கள். வனமே எங்கள் தாயகம் நாங்கள் ஒருபேதும் தங்களுடன் வந்து வாழச் சம்மதிக்க மாட்டோம், இங்கு நாங்கள். சுதந்திரமானவர்கள்: உழைத்துது விளைவைப் பகிர்ந்துண்டு, எல்லோரும் வாழ நாங்களும் இன்பமுடன் வாழ்வோம். உங்கள் குதிரையை நாங்கள் பிடிக்கவில்லை கட்டவில்லை. அதுவே இந்த எல்லையைவிட்டு அகல மறுத்து உங்கள் காவலரை விரட்டியடித்தது. அதன் விளைவாக, எங்கள் கண்ணுக்குக் கண்ணான நந்தசுவாமி மறைந்தார் எனவே எங்கள் அன்னை இசைந்தாலும் நாங்கள் சம்மதியோம் மண்ணிக்க வேண்டும், மாமன்னரே!”

கரங்கள் குவித்து, அவன் மறுப்பைத் தெரிவிக்க இருவரும் உள்ளே வருகின்றனர்.

‘கண்ணம்மா.” என்ற குரல் வெளிப்பட பூமகள் திரும்பிப் பார்க்கிறாள். பெரியன்னையின் மூச்சுத் திணறுகிறது: கண்கள் நிலைக்கின்றன.

* * *