பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

வனதேவியின் மைந்தர்கள்

அவள் முகம் மின்னுகிறது! அந்த ஒளியில் உணர்ச்சியின் நிழல்கள் ஆடுவதை அவர் கவனிக்கிறாரோ என்று தலை குனிந்து கொள்கிறாள். அவந்திகா முன் வருகிறாள்.

“சுவாமி, இந்த மாதிரியான பருவத்தில் தாய்வீடு செல்ல ஆசைப்படுவது இயல்பு என்று சொல்வார்கள். தேவியின் விருப்பம் நிறைவேற வேண்டும்; ஆசி மொழியுங்கள்!..”

பூமகளுக்கு ஆசுவாசமாக இருக்கிறது. அவந்திகாவின் அன்பில் நெகிழ்ந்து போகிறாள்.

“குழந்தாய்! மாமன்னரும், உன் அத்தை மாராகிய தாயரும், இந்த அரண்மனையின் அநுகூலங்களையும் வழிகளையும் விட்டுவிட்டு, காட்டுக்கு அனுப்பச் சம்மதிப்பார்களா... சத்திய முனிவர் இன்னும், காட்டு மக்களுக்கு நலம் கருதும் பயன் செய்யும் நல்ல நல்ல வேள்விகளை மேற் கொண்டிருக்கிறார், தாயே, நீ கட்டாயமாக வந்து பார்க்கத்தான் வேண்டும். யாவாலி ஆசிரமத்தின் எல்லையில் அக்காலத்தில் நான் சிறுவனாக இருந்த நாட்களில் பூச்சிக்காடு என்ற வனம் இருந்தது. அங்கு மிகுதியாகப் பட்டுப் பூச்சிகள் கூடுகட்டும். அதை எடுக்க, நகரங்களில் இருந்து சாலியர் கூட்டம் கூட்டமாக வருவார்கள். ஆனால், பூச்சிக்காட்டு மக்கள் அக்காலத்தில் ‘நரமாமிசம்’ கொள்பவர்களாக இருந் தார்கள். பூச்சிக்கூடுகள் அறுந்து அறுந்து காற்றிலே பறந்து எங்கள் எல்லைக்குள்ளும் வரும். இங்கும் ஒரு காலத்தில் எத்தனையோ வன்முறைகள் இருந்தன. அக்கரை முனி குமாரர்கள், அரச குலத்தோர் இங்கு வந்து பசுக்கூட்டங்களைக் கவர்ந்து செல்வர். வியாபாரிகளை மடக்கி இவர்கள் கொலை கொள்ளை என்று ஈடுபடுவார்கள். அதெல்லாம் பழங்கதை. வாழை வனத்தை யானைக்கூட்டம் கூட அழிப்பதில்லை. முறை வைத்துக்கொண்டு உண்டுவிட்டுப் போகும். ஒரு மரத்தின் நிழலில் வாழும் எத்தனையோ ஜீவராசிகளைப் போல் வாழப் பயிற்றுவிக்கிறார் சத்தியமுனி. பயிர்த்தொழில் பயிற்றுவித்தார். பிறகும் எத்தனையோ சிக்கல்கள். எனக்கு உனக்கு, என் நிலம், உன் நிலம் என்ற சண்டைகள் வரும். ஆனால், எப்படியும் மக்களை நல்வழிப்