பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

வனதேவியின் மைந்தர்கள்

“சுவாமி, மன்னர் உங்களைப் பார்த்தால் மகிழ்ச்சி அடைவார். வனவாசத்தில் அவர்கள் பலரைக் கண்டிருக்கிறார்கள். சபரி என்ற மூதாட்டி அவர்களை உபசரித்ததைச் சொல்வார். அப்போதுகூடத் தங்களையோ பெரியன்னையையோ காணவில்லை என்று ஆறுதலடைந்தேன். ஏனெனில் எனக்கு நேர்ந்த விபத்தைத் தாங்கள் அறிந்திராதது எனக்கு ஆறுதலாக இருந்தது. ஆனால் இப்போது, என் இளவயதுத் தோழர், என் குரு, என் காப்பாளர் என்று கூறி மகிழ்ச்சி கொள்வேன். திருமணத் தின்போதுகூடத் தங்களை மன்னருக்குக் காட்டி மகிழ, வாய்க்கவில்லை ...”

அவர் அன்பு நிறைந்த விழிகளால் அவளை நோக்கியவாறு வாளா விருக்கிறார். அவள் மனப்பரப்பில் தலை தூக்கும் ஆசை இதுதான்.

வனத்துக்கு இவருடன் அனுப்பி வைக்க மாட்டாரா? மூன்று நாட்களாக இங்கே வர நேரமில்லாத மன்னர், இவளை அழைத்துக் கொண்டு அவர்களை எல்லாம் காண வனத்துக்குச் செல்வாரோ?.... ஆனால்... இப்போது இப்படிக் கேட்டால்... தாய்வீட்டுக்கு... தாய்வீடுதானே அந்த வனம்?

“குழந்தாய், என்னம்மா தயக்கம்? எனக்கு விடைகொடு! நான் பெரியம்மையிடம் சொல்வேன். குஞ்சுப் பெண் மகாராணியாக வளர்ந்துவிட்டாள், நம்மை அழைத்திருக்கிறாள். போகலாம் என்று கூட்டி வருவேன்...”

“... சுவாமி, மன்னரிடம் அநுமதி பெற்று நான் இப்போதே உங்களுடன் வரலாமல்லவா? மன்னர், அரசாங்க அலுவல்களால் ஓய்வாக நேரம் ஒதுக்கவே முடியாதவராக இருக்கிறார். இன்று உணவு மண்டபத்துக்கும்கூட வரவில்லை.” அவர் புன்னகை செய்கிறார்.

“அப்படித்தானம்மா இருக்கும். நாடாளும் மன்னர் என்றால் எத்தனை பொறுப்புகள், கடமைகள்? தவிர, இந்த ஆண்டி, சக்கரவர்த்தித் திருமகளின் தேவியை, தாயாக இருக்கும் திருமகளை நான் அழைத்துச் செல்வதா? மன்னரே, எல்லாப்