பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

வனதேவியின் மைந்தர்கள்

பெற்றுப் புகழும் பெருமையும் அடைவாய் உனக்கு இனி ஒரு குறையும் வராது...”

“வணக்கத்துடன் வழிபடுகிறேன். குருவே, தங்கள் ஆசிகளே என் பேறு. மன்னரிடம் நான் உதித்த வேதவதியாற்றுக் கரைபூமிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள மக்களைக் கண்டு, சில நாட்கள் தங்கி வர வேண்டும் என்று சொன்னேன். மன்னர் விரைவில் என்னை அங்கெல்லாம் அழைத்துச் சென்று என் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதாக வாக்களித்திருக்கிறார் சுவாமி!”

“உன் தந்தை மன்னரிடம் தெரிவிப்பேன். அவர் மகளையும் மருமகனையும் வரவேற்க மிகவும் மகிழ்ச்சி கொள்வார். உனக்கு அழகிய பட்டாடைகளை, ஆபரணங்களை, ராணி மாதா அனுப்பியுள்ளார். வசந்த விழா வருகிறதல்லவா?”

“ஊர்மிளாவும் இளையவரும், சுதாவும், மாண்டவியும்கூட வசந்த விழாவுக்கு அங்கு வருவார்களா குருவே?”...

கேட்டுக் கொண்டே, அடிமைகள் சுமந்து வந்த மரப் பெட்டியை இறக்கிப்பட்டாடைகளையும் முத்துச் சரங்களையும் விதவிதமான காதணிகளையும் பூமகள் பார்க்கிறாள்.

தாமரையின் இளநீலச்சிவப்பு வண்ணத்தில் சரிகைக் கொடிகள் ஒடும் பட்டாடை மிகமிக மென்மையான துகில்...

அவள் கைவிரல்களால் அதைத் தொட்டுப் பார்த்து, “வேத புரிச் சாலியர் நெய்ததா சுவாமி? மிக மிக அருமை...!” என்று வியக்கிறாள்.

“ஆமாம்; சீனம், காவகம், புட்பகம் ஆகிய தொலைநாட்டு வணிகரெல்லாம் நம் வேதபுரிச்சாலியரின் இந்தக் கைநேர்த்தியைக் கண்டு வியக்கின்றனர். இந்த ஆடை, தாயாக இருக்கும் பூமகளுக்கென்று சிறப்பாக நெய்யப்பட்டது. வேதபுரித் திருமகளாக நீ வந்த நாட்களில் இருந்தே அந்த நகருக்கு ஒரு புதிய செழிப்பும் பெருமையும் வந்து விட்டது. திருமகள் மைந்தரைப் பெற்று எடுத்துக் கொண்டு தாயாக அங்கு வரவேண்டும். இது தந்தையின் ஆசை” சிறு முள் விரலில் பட்டாற்போல் முகம்