பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

வனதேவியின் மைந்தர்கள்

“உக்கும். கூட்டில் எனக்கு ஏது இடம்? அதுதான் ஏற்கெனவே மன்னர் இருக்கிறாரே?”

“நீ ரொம்பப் பொல்லாதவள். உனக்கு வாய் அதிகமாகி விட்டது. மன்னரை நானா கூட்டுக்குள் அடைத்திருக்கிறேன்?”

“ஆமாம். இங்கெல்லாம் அப்படித்தான் சொல்கிறார்கள். அந்தப்புர விடுதி என்று ஒன்று இருப்பதையே அவர் அறிய வில்லையாம். இதற்குள் எந்த மன்னர் பரம்பரையிலும் இப்படி ஒரே பத்தினி என்று இருந்ததில்லையாம்!”

“ஒகோ” என்று கேட்கும்போது பொய்க்கோபம் வந்தாலும் உள்ளத்தில் பெருமை துளும்புமே?....

இப்போது?

அவள் பறவை எச்சங்கள். அசுத்தங்களைப் பொருட் படுத்தாமல் அங்கு நிற்கிறாள். கடலலையே ஒய்ந்து விட்டாற் போன்ற அமைதி நிலவுகிறது. கிளியைக் கையில் எடுத்து அதன் மேனியைத் தடவிக் கொடுக்கிறாள்.

“தத்தம்மா, என்ன நடந்ததென்று சொல்லமாட்டாயா? ஜலஜா அவரைத் தனிமையில் சந்தித்தாளா, இங்கு?... பறவைகள் எச்சமிட்டனவா? அவர் வெற்றிலைத் தம்பலத்தைத் துப்பி விட்டுப் போனாரா?”

“முதலில் மன்னர் மட்டுமே இங்கு கவலையுடன் இருந்தார். அவர் கையில் ஒர் அடுக்குமல்லிகை இருந்தது.ஒவ்வோர் இதழாக எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தார்...”

பூமையின் உயிர் நரம்பில் முள் குத்தியிட்டாற்போல். துடிப்பு ஏற்படுகிறது. வலக்கண் துடிக்கிறது; இதழோரங்கள் துடிக்கின்றன.

“அப்போது தான் அவள். ஜலஜா பூனைக்கண் வந்தது....” பூமை துடிப்புத் தெரியாமலிருக்க வலக்கையால் அந்தக் கண்ணை மூடிக் கொள்கிறாள். அரக்கர் கோன் சிறையில் இருந்து மீண்ட மகிழ்ச்சியில் மன்னிரைப் பார்க்கப் போகிறோம் என்ற செய்தி வந்ததும் அந்த அரக்கர் குல மூதாட்டி அவளை அருவியில்