பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

வனதேவியின் மைந்தர்கள்

"ஒன்றும் நடக்கவில்லை. எழுந்து போய்விட்டார்.”

“அவள்...?”

“அவள் புருசன். அந்தத் துணி வெளுப்பவன் அவளைத் தேடிவந்தான். நையப் புடைத்தான். அவன் துப்பிய எச்சில்....”

அமைதி கூடவில்லை.

“தத்தம்மா, நீ நல்ல செய்தி கொண்டு வருவாய். இப்போது நீ எனக்குத் தோழியாக இல்லை...!”

“இது நல்ல சேதி மகாராணி. மன்னரின் இதயத்தில் உங்களைத் தவிர வேறு எவருக்கும் இடமில்லை”

கிளி பறந்து செல்கிறது.


7

“மகளே, நாம் அதிகாலை நேரத்தில் கிளம்பி, கோமுகி ஊற்றுக்குச் செல்கிறோம். ராணி மாதாக்கள் அங்கே உங்களுக்கு வனவிருந்து ஏற்பாடு செய்திருக்கிறார்கள். தேவையான பொருட்கள் எல்லாம் அங்கே கொண்டு செல்கிறார்கள் பணியாளர்...”

அவளுக்கு உற்சாகம் முகிழ்க்கிறது.

“யார்? பெரியன்னையா? மன்னரும் வருகிறாரா?”

“பெரிய மாதா சொன்னதாகத் தெரியவில்லை. இளைய மாதாவின் ஏற்பாடுதான். சுமித்திராதேவியம்மையும் வருகிறார்கள். தாங்கள், இளவரசி ஊர்மிளா சுதா, எல்லோருடனும் பணிப்பெண்கள், ஏவலர், பாதுகாவலாகவில்லேந்தி மிக இளைய குமாரர், சத்ருக்னர் எல்லோரும் செல்கிறோம்....” எழும்பிய உற்சாகம் சப்பென்று வடிந்து போகிறது.

“அவந்திகா? எனக்காக நீ ஓர் உதவி செய்வாயா?”

“நீங்கள் மகாராணி, உங்களுக்குப் பாலூட்டும் பாக்கியத்தைக் கொடுத்து, என்னை இன்றும் பாதுகாத்து,