பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

77

சிகரத்தில் வைக்கிறீர்கள். என்னிடம் நீங்கள் உதவி என்று கோரலாமா, தேவி? ஆணையிடுங்கள்!”

“அந்தப் பணிப் பெண்ணை. அவள்தான், பூனைக்கண்ணி, அவளை இரகசியமாக என்னிடம் கூட்டி வா, யாருக்கும் தெரியக்கூடாது. ஏனெனில் மன்னரின் மீது எந்தக் களங்கத்தின் நிழலும் படியலாகாது. ஊர்மி, சுதா, மாதாக்கள், யார் செவிகளுக்கும் அரசல் புரசலாகக் கூடப் போய்விடக்கூடாது, அவந்திகா!” அவள் சிறிது நேரம் பேசவில்லை.

“நான் கேட்கிறேன், வெற்றிலை மடித்துக் கொடுக்க, கவரி வீச உடைகள் எடுத்துத் தர, உணவு கொண்டு வைக்க, மன்னர் இளவரசர் மாளிகைகளில் பணிப்பெண்கள் எதற்கு? வேண்டு மானால் தீபமேற்றி விட்டுப் போகட்டும். ஆடவரே பணி யாளனாக இருக்கலாமே?”...

“மகாராணி இந்தக் கருத்தை ராணிமாதா - ஏன், மன்னரிடமே சொல்லலாமே?”

“அந்தப்புரக் கிளிகளுக்கு விடுதலை என்று சொல்கிறார்கள். இதுவும் ஒருவகை அடிமைத்தனம்தானே?... அவந்திகா, அன்று குளக்கரையில் சந்தித்த பிறகு, மன்னர் என்னைக் காண வரவேயில்லை. உணவு மண்டபத்தில் பார்த்தும் பாராமலும் போய் விடுகிறார். நானே இன்று, அமுது பரிமாறினேன். நிமிர்ந்து பார்த்துவிட்டு, “நீ எதற்கு இந்தப் பணி எல்லாம் செய்ய வேண்டும்? நீ போய் ஒய்வு கொள்” என்றார். எனக்கு... துயரம்... சொல்லும்போதே நெஞ்சு முட்டுகிறது. இப்படி அவர் முன்பு இருந்ததேயில்லை அவந்திகா. மன்னர் பத்தரை மாற்றுத் தங்கம் அப்படியும் என் மனம் அலைபாய்கிறது. என் மாமிமார் எத்துணை பொறுமை காத்து இருப்பார்கள்? அரக்க வேந்தனின் பட்டத்து ராணியை நினைத்துப் பார்க்கிறேன். அத்தனை பெண்களும் மங்கலங்கள் இழந்து, காப்பாரில்லாமல் அழிந்தார்கள். மன்னனின் வீரதீர பராக்கிரமங்கள் எல்லாம் ஒன்றுமில்லாமல் ஆயிற்று. என் மாமன், சக்கரவர்த்திப்