ராஜம் கிருஷ்ணன்
83
வெண்மை அடிவயிறு. “என்ன அழகு! இதை இப்போது யார் எதற்காக அடித்தார்கள்?”
ஊர்மி சிரிக்கிறாள். “விருந்துக்குத்தான். அந்தக் குதிரைக் காரர்தான் வெறும் வில்-உருண்டை கொண்டு அடித்தார். என்ன குறி!”
அவள் கண்கள் நெருப்புக் கோளமாகி விட்டாற்போன்று நிற்கிறாள்.
“விருந்துக்கா?”
“ஆம் தேவி. கருவுள்ள பெண்களுக்கு இதன் ஊனைப் பக்குவம் செய்து கொடுப்பது வழக்கமாம் முக்கியமாக இங்கு வனவிருந்துக்கு வருவதன் பொருளே, இத்தகைய அபூர்வமான பறவைகள், மூலிகைகளுக்காகத்தான்!”
கபடில்லாத உற்சாகங்கள் தீப்பற்றி எரிந்தாற்போல் இருக்கின்றன.
“அரக்கர் ராச்சியத்தில் கூட இப்படிக் கொடுமை நடக்க வில்லை. உயிர்கொலை தவிர, உங்கள் சந்தோசங்கள் வேறு கிடையாதா? ஐயோ! ஆணும் பெண்ணுமாய் கூடுகட்டி குஞ்சு பொரித்து, அதற்கு உணவூட்டும் பறவை இனம்..” என்று அவள் தன்னை மறந்து புலம்புகிறாள்.
ஆட்டமும் பாட்டமும், சிரிப்பும் களை கட்டவில்லை.
“தேவி, ராணிமாதா உத்தரவில் இது நடந்தது. இது வழக்கம்தான். மான், மீன், பறவை வீழ்த்திய பணியாளன் பாதம் பணிந்து மன்னிப்புக் கேட்கிறான்.”
“அவந்திகா, எனக்கு இன்று எந்த உணவும் வேண்டாம். இந்தச் சூழலே பிடிக்கவில்லை. என்னைத் தனியாக விடுங்கள்.”
தாழ்வரையில் ஓர் ஒரமான இருக்கையில் சென்று சாய்கிறாள் பூமகள்.
அடுத்து, கானகத்தில் காய்ந்த விறகுகள் சுள்ளிகளைக் கல்லைக்கூட்டி அடுப்பாக்கி எரிய விட்டு உணவு தயாரிக்கும்