ராஜம் கிருஷ்ணன்
91
வலக்கண் துடித்தது. வளர்த்த கிளி. நெஞ்சம் கலந்த தோழி போன்ற பறவை, பூனைக்கு விருந்தா?...
“பூனைக்கண்ணி” என்று அக்கிளி கூறிய சொல் நெஞ்சைப் பிடிக்கிறது.
என்ன ஒர் ஒற்றுமை? இந்த மாளிகையில் இது வரையிலும் இப்படி ஒரு விபரீதம் நிகழ்ந்ததே இல்லையே? சமையற்கட்டில் மீன்திருத்தும் போது பூனைகள் வரும். அவள் சாடை மாடையாகப் பார்த்து வெறுப்பைப் புலப்படுத்தி இருக்கிறாள்.
பூனைக்குப் பாலோ மீனோ கொடுப்பதுதானே? கூட்டில் இருக்கும் பால் கிண்ணத்தை நக்கிவிட்டுப் போக வந்ததோ?
பச்சைக்கிளி... அவள் தத்தம்மா... தெய்வமே? இது எந்த நிகழ்வுக்கு அறிகுறி?
“நீசகுலத்தாளே, பூனைபற்றிய சேதியை உடனே வந்த விழ்க்கிறாள்!”
“இல்லை தாயே, எப்படி இந்த விபரீதம் நேர்ந்த தென்றே தெரியவில்லை. நம் அரண்மனைப்பூனை இல்லை இது. நம் பூனைகள் இங்கே கிளிகளோடு சல்லாபம் செய்யும். இரை கொள்ளாது. இது எப்படி எங்கிருந்து வந்ததென்று தெரிய வில்லை. முழங்கால் உயரம் இருந்தது... நாமநாமமாக.. புலிக்குட்டி போல் இருந்தது...” என்று அஞ்சியவண்ணம் ராதை விவரிக்கிறாள்.
“போதும். இப்போது யாரும் இதைப்பற்றிப் பேச வேண்டாம். தேவி, பயணக்களைப்பில் சோர்ந்திருக்கிறீர்கள். வெதுவெதுப்பாக நீராடி, சிறிது உணவு கொண்டு உறங்குங்கள். மாலையில் மன்னர் நிச்சயமாக வருவார்....” என்று அவள் மனமறிந்து அவந்திக்ா இதம் சொல்கிறாள்.
உடல் அசதி தீர நீராடுகிறாள். துடைத்து, முடிகாய வைத்துக் கொண்டே உணவு கொண்டுவருகிறாள். பால் கஞ்சி, கீரை, வெண்டை, கத்திரி, பூசணி காய் வகைகளும் பருப்பும் சேர்த்த ஒரு கூட்டு, மிளகு சேர்த்த காரமான ஒரு சாறு. உணவு அவந்திகாவே தயாரித்துக் கொண்டு வந்து அருந்தச் செய்கிறாள். அறையை