பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

95

“அடி! சாமளி! விமலை? இளவரசர் வந்திருக்கிறார். உபசரியுங்கள். அருந்துவதற்குப் பானம் கொண்டுவாருங்கள்....” என்று ஆரவாரிக்கிறாள்.

ஆசைப்பட்ட இடங்கள்... வேதவதிக்கரை. அவள் பிறவி எடுத்த பூமி, அங்குள்ள மக்கள்... நந்தமுனி, பெரியம்மா.... அவந்திகாவுக்கு உவப்பாகப்படவில்லை.

“இது என்ன அவசரம்? இப்போது தான் ஒரு பயணம் முடிந்து வந்திருக்கிறீர்கள்? என்ன பரபரப்பு?”

கால் கழுவ நீரும், இருக்கையும், கனிச்சாறும் ஏந்திவரும் பணிப்பெண்கள் முற்றத்தில் இளவரசனைக் காணாமல் திகைக்கிறார்கள்.

“மன்னர் தாமே வந்து இதைச் சொல்லக்கூடாதா? இளையவர் ஏதோ காலில் கஞ்சியைக் கொட்டிக் கொண்ட வேகத்தில் ஒடுகிறாரே?”

“அவந்திகா, நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். இப்போது ஏதும் குறை சொல்ல வேண்டாம். மன்னர் என் விருப்பத்தை நிறைவேற்றுகிறார். அதுவே பேறு. அவருக்குப் பயணத்துக்கு முன் அநேக அலுவல்கள் இருக்கும். தம்பியை அனுப்பியுள்ளார். எனக்கென்ன ஒய்வு? ஒய்வு ஒய்வு ஒய்வு! நான் என்ன வேலை செய்தேன்! நீர்கொண்டு வந்தேனா? குற்றினேனா? இடித்தேனா? புடைத்தேனா? உணவுபக்குவம் செய்தேனா? இப்போது நான் விரைந்து சித்தமாக வேண்டும்”

என்று பரபரக்கிறாள்.

அவந்திகா மவுனமாகிறாள்.

அவளுடைய உடலில் புதிய சக்தி வந்து விட்டாற் போலிருக்கிறது. பட்டாடைகள், அணிபணிகள் வைத்திருக்கும் மரப்பெட்டிகளைத் திறக்கிறாள். வண்ண வண்ணங்களாகக் கண்களுக்கு விருந்தாய் கலைப்படைப்புகள்.... பெருந்தேவி அன்னைக்கு, இந்தப்பட்டாடை இந்தக் கம்பளிப்போர்வை. நந்த முனிவருக்கு ஒரு கம்பளி ஆடை வேடுவப் பெண்களுக்குச் சில