பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

வனதேவியின் மைந்தர்கள்

ஆடைகள். கஞ்சுகங்கள். இங்கே இந்தப் பெண்களைப் போலில்லாமல்.... அவர்கள் சுதந்தரமானவர்கள். கானகம் செல்கையில், மன்னரைக் காண மீனும் தேனுமாக உபசரித்த படகுக்காரன், அவன் மனைவியின், குஞ்சு குழந்தைகள் கண் முன் பவனி வருகிறார்கள்.... சிறை மீண்டு வருகையில் வேடுவப் பெண்கள் தோலாடையும் மணிமாலையும் அணிந்து வந்த காட்சி தெரிகிறது. ஒரு குழந்தை வெண்முத்துப் பற்களைக் காட்டச் சிரித்த வசீகரத்தில் அவள் அருகே சென்று தொட்டணைத்தாள். அந்த மக்கள் கூட்டத்துக்கே உரித்தான வாடை மறந்து போயிற்று. மூக்கில் ஒரு வளையத்துடன் அந்தப் பெண் குழந்தையின் முகம் தெரிகிறது. மகாராணி தொட்டதை எண்ணி, அவர்கள் மேலும் மேலும் பரவசப் பட்டதை நினைத்தவாறே, ஆடைகளை, அணிகலன்களைப் பொறுக்கி எடுத்துச் செல்லவிருக்கும் பெட்டியில் வைக்கிறாள்....

“அவந்திகா, நான் விரைந்து நீராட வேண்டும். மன்னர் அருகில் இப்படி உறக்க சோம்பேறியாக இருந்தால் பரிகசிப்பார்....”

அவந்திகா வாசனைப் பொடிகள், தைலம், சீப்பு, ஆகியவற்றுடன் நீராடும் முற்றத்துக்கு அவளை அழைத்துச் செல்கிறாள்.

பூமகளுக்குப் பரபரப்பில் என்ன பேசுகிறாள் என்பதே உணர்வில் படியவில்லை. சொற்கள் தன்னிச்சையாக நாவில் எழும்பி உயிர்க்கின்றன.

சுடுநீரில் போதுமான வெம்மை ஏறவில்லை.

“போதும் அவந்திகா கூந்தலை நனைக்க வேண்டாம்!” எல்லாம் விரைவில் முடிகிறது.

“கூந்தல் சிங்காரத்துக்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளாதே! அவர் விரைந்து வந்து விடுவார். பொறுமை கிடையாது! ‘இந்தப் பெண்களே இப்படித்தான் அலங்கரித்துக் கொள்ளத் தொடங்கி விட்டால் நேரம் தெரியாது’ என்பார்! நாங்கள் விரைவில் சென்றாலே பொழுது போகு முன் நல்ல இடத்தில் இரவைக் கழிக்க முடியும்... போகும் வழியில் யாரேனும் முனி ஆசிரமத்தில்