பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

97

தான் தங்குவோம். கோமதி ஆற்றின் கரையில் இப்போதெல்லாம் அடர்ந்த காடுகளே இல்லை. விளை நிலங்களாகிவிட்டன. இப்போது என்ன விதைத்திருப்பார்கள்...?” அவந்திகாவுக்கு மென்மையான கை. அவள் கூந்தலைச் சிக்கெடுத்துச் சீராக்கக் கை வைக்கும் போது இதமாக உறக்கம் வந்துவிடும். கூந்தலை, மூன்றாக, நான்காக வகுத்து, சிறு பின்னல்கள் போட்டு, சுற்றிக்கட்டி முத்துக்களும், பொன்னாபரணங்களுமாக அழகு செய்வாள். வண்ணமலர்ச்சரங்களாலும் அழகு செய்வாள். இந்த அலங்காரங்கள் முன்பு செய்யத் தெரியாது. பதினான்கு ஆண்டுக்காலம், இந்த அரண்மனையில், இளைய மாமி, கேகய அரசகுமாரியிடம் கற்றுக் கொண்டிருக்கிறாள். அந்தப் பெருமாட்டி அறுபத்து நான்கு கலைகளிலும் தேர்ச்சி பெற்றவராம்.

செண்பகமலர்களைக் கொண்டு வந்து கொட்டுகிறாள்.

“செண்பகச் சரங்கள் சுற்றும் கூந்தல் சிங்காரமா? அவந்திகா, இதற்கு வெகுநேரம் ஆகுமே அவந்திகா?... வேண்டாம். ஒவ்வொரு காலிலும் மலர்களைச் செருகி, பின்னல்களை நாகபட வடிவில் எடுத்துக்கட்டுவதற்குள் பொழுது போய் விடும்...”

“தேவி, மன்னர் பார்த்து மகிழவேண்டாமா? இந்த அலங்காரங்களை, நான் எப்போது யாருக்குச் செய்து காட்ட முடியும்?....”

“போதும், நாங்கள் இப்போது, புனிதப் பயணம்போல் முனி ஆசிரமங்களுக்குப் போகிறோம். கொலு மண்டபத்துக்குப் போகவில்லை. இப்போது தவசிகளின் மனவடக்கம் பாலிக்க வேண்டும் இப்படியெல்லாம் அலங்கரித்துக் கொண்டு போனால், மன்னர் என்னைத் தீண்டக் கூட மாட்டார்...”

“தேவி!” என்று அவந்திகா உரக்கக்கூவுகையில் பூமகள் நாவைக் கடித்துக் கொள்கிறாள்.

...உடல் குலுங்குவது போல் ஒர் அதிர்ச்சி. அவளையும் மீறி விழுந்து விட்ட சொல்லா அது?....

வ. மை. - 7