பக்கம்:வரதன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 வரதன் இவைகளையெல்லாம் கண்ட வரதன், ஆச்சரியத் துடன் அங்கே சிறிதுநேரம் கின்றிருந்தான். பிறகு, அவனுக்கும் முருகனுக்கும் பேச்சு நிகழ்ந்தது. வரதன்-முருகா ! இன்று நமது பள்ளியில் என்ன கொண்டாட்டம் ? முருகன்-ஒ, உனக்கு ஒன்றும் தெரியாதா? நமது பாடசாலையில் அடுத்தவாரம் கல்வித் துறைத் தலைவர் வரப்போகின்ருர். வரதன்-அப்படியா ஆனால் நான் அன்று பட்டுச் சட்டையும், சரிகைத் தொப்பியும் போட்டுக் கொண்டு வருவேன். முருகா, நீ என்ன சட்டை அணிந்துவரப் போகின்ருய் ? முருகன்-அவ்வளவு உயர்ந்த சட்டைக்கு கான் எங்கேயடா போவேன்? என் சிறிய அண்ணுவின் கறுப்புக் கம்பளிச் சட்டையைத்தான் நான் போட்டுக் கொண்டு வரவேண்டும். வரதன்-ஒ, கம்பளிச் சட்டையா ? அது சொற சொற'வென்று இருக்கும். அன்றியும், அது உன் சிறிய அண்ணுவின் சட்டை ; அதை நீ போட்டுக் கொண்டால், குடுகுடுப்பைக் காரனைப்போல் இருப்பாய். முருகன்-அடே போடா. இதிலெல்லாம் என்னடா இருக்கின்றது ? உன் சட்டையைப் பார்த் துத்தான் உபாத்தியாயர் உன்னை மேல்வகுப்புக்கு மாற்றப் போகி ருரோ ? ஆள் அழகாய் இருந்தால் போதுமா ? எதற்கும் கல்விதானேயடா அவசியம் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/13&oldid=891096" இலிருந்து மீள்விக்கப்பட்டது